பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/303

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருளியலும் அறிவியலும்

299


கின்ற ஒன்றை இயற்கையிலேயே உருவாக்கப்பட்டுப் படைப்பிலே அதிசயமாகப் பரந்து கிடக்கின்ற ஒன்றைக் கண்டுபிடிப்பது என்றுதான் பொருளே தவிர, அவன் படைப்புக் கர்த்தாவாக வந்ததில்லை. விஞ்ஞானி நேற்றும் படைப்புக் கர்த்தாவாக இருந்ததில்லை. இன்றும் இல்லை. நாளையும் வருவான் என்பது ஐயப்பாடுதான். எனவே விஞ்ஞானம் என்பது கண்டுபிடிப்பது என்று சொன்னால் கண்டுபிடித்தவனுக்கும் ஏற்கெனவே வைத்தவனுக்கும் எவ்வளவு உறவு இருக்கிறதோ அவ்வளவு உறவு இருக்கிறது அறிவியலுக்கும் அருளியலுக்கும் என்று சொல்கிறார்கள். அதுமாத்திரமல்ல. விஞ்ஞானத் திறனுடைய முழுமுறை வைப்பு இருக்கிறதே அந்த முறை அமைப்புப்படி பார்த்ததால், அது நாடு முழுவதும் வையகம் முழுவதும் முழுமையாகக் காட்டுவதில்லை. உங்களுக்குத் தெரியும். ஐம்பது ஆண்டு அறிவியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால் நாளுக்குநாள் நாழிகைக்கு நாழிகை மாறுபட்டுக் கொண்டே வந்திருக்கிற உண்மை. வளர்ந்த அறிவியலாக-பரிபூரணத்துவம் பெற்ற அறிவியலாக நாம் ஒன்றைக் கருத முடியவில்லை. அணுயுகத்திலே வாழ்கிறோம். அணுவைப்பற்றி நிறையப் பேசுகின்றோம்.

17-ஆம் நூற்றாண்டு என்று நினைக்கிறேன். அந்த நூற்றாண்டுக் கடைசியில் அதாவது 18ஆம் நூற்றாண்டிலே அணு என்றால் உடைக்க முடியாதது, பிளக்க முடியாதது என்றெல்லாம் விஞ்ஞானிகள் சொன்னார்கள். அதையும் நாம் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் அடுத்த நூற்றாண்டின் கடைசியில் அணுவை உடைக்க முடியும். கோடிக்கணக்கான துகள்களாக உடைக்க முடியும். ஒரு குண்டூசியின் முனையிலே கோடிக்கணக்கான அணுக்கள் இருக்கின்றன என்றெல்லாம் சொன்னார்கள். ஆக அறிவியல் துறை முடிவுகள் இருக்கின்றனவே அவை பூரணமாக வளர்ந்து விடவில்லை. எங்கோ வளர்ந்து கொண்டிருக்