பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/310

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிலநூல் வரலாற்றை நிலநூல் தன்மையைப் படிப்பது ஒரு அறிவியலாக இருக்கிறதோ அதுபோல உயிரியலைப் பற்றி அறிந்து கொள்வதும் உயிரைப் பற்றி ஆராய்வதும் உயிரைப் முடிவுகளைக் காண்பதும் உயிரியல். அறிவியலை நாம் முழுதும் உணர்ந்து கொண்டோமானால் அந்த உயிரினுடைய தத்துவங்களை-எண்ணச் சேர்க்கைளைத் தெரிந்து கொள்வோமானால் எப்பொழுது நமக்குத் தேவைப்படுகின்ற அறிவியல் உணர்வு இருக்கிறதே அதைவிட அருளியல் உணர்வு மிக இன்றியமையாத ஒன்று என்ற கருத்து நம்மில் ஆழமாகப் பதியமுடியும். அந்த உயிரியல் அறிவின்மை காரணமாகத்தான்-உயிரைப்பற்றிய தெளிவான கருத்தும் கொள்கையும் தன்மையின் காரணமாகத்தான் பலருக்குச் சமய வாழ்விலே நம்பிக்கை குறைவதும் ஐயமிருப்பதும் காரணமாக இருக்கிறது. அதைவிட உயிரியல் சம்பந்தமாக நமக்குச் சில அறிவுகள்-சில எண்ணங்கள்-சில கோப்புகள் இருக்குமானால் சில கொள்கை வரம்பு இருக்குமானால் இந்த அறிவு நம்மை உயர்ந்த அருளியல் வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றது. அப்படி அழைத்துச் செல்கின்ற பொழுது ஏற்படுகின்ற சமய அனுபவம் இருக்கிறதே அந்த சமய அனுபவத்துக்கு எடுத்துக் காட்டாக ஒன்றே ஒன்று சொல்ல முடியும். உயர்ந்த அனுபவ விஞ்ஞானி இருக்கின்றான். இரண்டு பேருக்கும் தாயுமானவருடைய பாட்டு ஒன்றைச் சொன்னால் என்னுடைய கருத்து முற்றுப் பெற்றதாகும் என்று கருதுகிறேன். தாயுமானவர், நாம் முன்னே சொன்னதுபோல செடியிலே பூத்து நின்ற ஒரு மணமிக்க மலரைப் பார்த்தார். பார்த்தவுடனேயே ‘பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப் பனிமல ரெடுக்க நண்ணேன்’ என்று பாடிப்பரவி, வாழ்த்திவிட்டார். அது மெய்ஞ்ஞானியினுடைய நிலை. அந்த பூவைப் பறித்து அதை வாழ்க்கைக்குப் பயன்படுத்தி அனுபவத்துக்குக் கொண்டு வருகின்ற முயற்சியிலேயே மனித அறிவியல் மேதைகள்