பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/319

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருளியலும் அறிவியலும்

315


அதற்கு இருபத்தேழு மனைவியரைக் கட்டிவைத்துப் படித்துக் கொண்டிருக்கிறோமே அந்தக் கதை வேண்டுமானால் நம்பிக்கையில்லாமற் போகலாம்-அந்தக் கட்டுக்கதை வேண்டுமானால் நமக்கு நம்பிக்கை தராமற் போகலாம். ஆனாலும், சந்திர மண்டலத்தைப் பற்றிய அறிவு அல்லது சந்திரனுக்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு பேரறிவு, ஒரு பேராற்றலிருக்கிறதே அதைப் பற்றிய நம்பிக்கை விட்டுப் போக முடியாது. அவைகள் நாம் பாமரராக இருந்த காலத்திலே அறிவு வளர்ச்சி பக்குவப்படாத காலத்திலே- கதைகளாக, கற்பனையாகச் சொல்லிக்கொண்டு வந்தவைகள். அந்தப் பெரிய கற்பனைக் காட்டைக் கனவு கண்டான். அவற்றைப் பலவாறாக, பல சொற்களாகச் சொல்லி வைத்தான், கதைகளாக, வடிவங்களாக. அவற்றிலே உண்மை பிறந்துவிட்டால் காடு அழிந்து போகிறது. ஒரு சந்தன மரம் என்று சொன்னால் பெரிய காட்டைத் தெரிவித்துப் பேசுகிறோம். பேசுவதைப் பார்க்கிறோம். பல மொழி வார்த்தைகளை இடையிடையே போட்டுப் பேசுவார்கள்-ஆனாலும், அந்த வழிப்பட்ட பொருள் உணர்ச்சி அவர்களுக்கு இருக்காது-பொருளின் வழிப்பட்ட பயன் உணர்ச்சி இருக்காது-நமக்குப் புரியாத மொழியை நாம் எப்படியோ பயின்றுகொண்டு அல்லது மனப்பாடம் செய்துகொண்டு சொல்வதுபோல உணர்வுக்குப் படாமல், அறிவுக்குப் படாமல், (அறிவுக்குப் படாமல் என்று சொல்லக்கூடாது. அறிவுக்குப் பலமொழிகள் படுவதுண்டு. உணர்வுக்குத்தான் வருவதில்லை. எனவே) உணர்வுக்குப் படாமல் சொல்லுகின்ற சொற்களைப் போல அறிவியல் இருக்கிறதே அது உணர்வுக்கு வராத அறிவியல் இருக்கிறதே போல என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட எண்ணங் களையெல்லாம் நினைவிலே வைத்துக்கொண்டு பார்க்கின்ற பொழுது அகங்கையும் புறங்கையும் போல, நீரும் தண்மையும் போல, மலரும் மணமும் போல அறிவியலும் அருளியலும்