பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/323

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

319


நான் அதற்கு வேடிக்கையாகப் பதில் சொன்னேன்: ‘கடவுள் இப்பொழுது என்னிடத்தில் ஒரு செய்தி அனுப்பியிருக்கிறார்; அதுவும் இரகசியமாகச் சொல்லி இருக்கிறார். சொர்க்கத்தைப் பூட்டி, மடியில் சாவியை வைத்துக் கொண்டிருக்கிறாராம் என்று. உடனே ஏன் என்று கேட்டார்கள். “உலகத்தைச் சொர்க்கமாக்குவதற்காக நான் மனிதனை அனுப்பினேன். அவன் அங்கேயே அதை நரகமாக்கி விட்டான். அவன் இங்கேயும் சீக்கிரமாக வந்து விட்டால், இதையும் நரகமாக்கி விடுவானோ என்று பயந்து நான் சொர்க்கத்தைப் பூட்டி வைத்திருக்கிறேன். உலகம் சொர்க்கமாகிற பொழுது இந்தச் சொர்க்கமும் திறக்கப்படும் என்று கடவுள் சொன்னார்” என்றேன். ஆக எங்கும் அமைதி, எங்கும் சகோதரத்துவ உணர்ச்சி நமக்குத் தேவை. வாழ்க்கையில் சமய உணர்ச்சி என்பதே மனிதனுடைய ஆன்மாவைத் தரப்படுத்துவதும், தகுதிப்படுத்துவதும்தான். கரடு முரடாகவும், முரட்டுத்தனமாகவும், மற்றவர்களுக்கு இசைவில்லாமலும், இயைபில்லாமலும் பழகுகிற பழக்கத்தைப் பண்படுத்திப் பக்குவப்படுத்துகிற ஒரு வாழ்க்கை முறைக்குத்தான் சமயம் என்று பெயர். அதற்கு ஓர் எளிய உதாரணம் நான் அடிக்கடி சொல்வதுண்டு. நம்மில் பெரும்பாலோர் அரிசிச் சோறு சாப்பிடுபவர்கள். ஆனால் எந்த நாட்டுக்கழனியிலும் எனக்குத் தெரிந்து சோறாகவே விளைந்த்தில்லை. நெல்லாகத்தான் விளைகிறது. ஆனால், மனிதன் முயன்று அதைச் சோறாக்கி வெற்றி பெற்றுவிட்டான். கடவுளைக் காண்பதில் எவ்வளவு பேர் வெற்றி பெற்று விட்டார்கள் என்றால், விடை மிகவும் சுருக்கமாக இருக்கும்.

ஆனால் நெல்லைச் சோறாக்குவதில் எவ்வளவு பேர் வெற்றி பெற்றுள்ளார்கள் என்றால், அதில் எல்லோருமே வெற்றிபெற்று விட்டார்கள். நெல் அறுவடை செய்தபொழுது ஈரமாக இருக்கும். உண்பதற்குரிய தகுதி அதற்கு இன்னும்