பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/344

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருக்கிறார்கள்’ என்று எனக்குத் தெரியாது என்று சொல்வதில். அவன் அவ்வளவு தூரம் சிறுத்துப் போவதிலே பெருமை காண்கிறான். உதாரணத்துக்கு ஒன்று சொல்லலாம். பரந்த நீர்ப்பரப்பில் தூசுகள் அதிகம் கிடந்தால்கூடப் பார்க்காமல் நாம் குடிப்போம். சில பேர் கையில் கைக்குட்டையை வைத்துக் கொண்டு கூடக் குடித்து விடுவார்கள். ஆனால் சின்ன அண்டாத் தண்ணீரில் தூசு கிடந்தால் கொட்டிவிடுவார்கள். சின்னக் குவளையிலே நீர் இருந்தால், கண்ணுக்குத் தெரியும்; கொட்டிவிடுவார்கள். எல்லை சுருங்கச் சுருங்க மனிதனுக்குக் குற்றங்கள் பெரிதாகத் தெரியும். எல்லை-பரப்பளவு கூடக் கூட, மனித உலகத்தோடு நம்முடைய தொடர்பு கூடக் கூட, குறைகள் எல்லாம் நிறைகளாகத் தெரியும். மனிதரிடத்திலே குறைகளைவிட, நிறைகளை அதிகம் காணப் பழக வேண்டுமென்பது, மாணிக்கவாசகருடைய யானை உவமை. யானை தன்னையே கட்ட சங்கிலி எடுத்துக் கொடுக்கிறது. இதேபோல, மனிதன் தன்னையே துன்பத்திற்கு ஆளாக்கிக் கொண்டும், தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலும் உள்ளான். தன்னுடைய தலைவனைப் பற்றித் தெரிந்து, அவன் தனக்குவமை இல்லத தலைவன் என்பதைப் புரிந்து கொண்டு, அவனை ஒன்றியிருந்து நினைக்க வேண்டும்.

வழிபாட்டினுடைய முக்கியமான நோக்கம் அந்த உயிர் அதிலே கலக்க வேண்டும். ஒன்றிலே ஒன்று ஊறினால்தான் அதன் சுவையை அந்தப் பொருள் எடுத்துக் கொள்ளும். அது சர்க்கரையில் ஊறினாலும் சரி. உப்பிலே ஊறினாலும் சரி, அதில் ஊற வேண்டும். அதே போல, இறை வழிபாட்டில் நாம் இதயத்தோடு கலக்க வேண்டும்; அதனால் தான் நாம் அடிக்கடி தமிழில் வழிபாடு வேண்டும். தமிழில் அர்ச்சனை வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். அது ஒன்றும் மொழிப் பிரச்சனை அல்ல. இன்ன மொழியில்தான் நடைபெற வேண்டும் என்ற வரையறை செய்வது நம்முடைய