பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/353

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

349


தமிழுக்கும் சமயத்திற்கும் தொடர்பில்லை என்று யாரும் கருதிவிடக் கூடாது. தெளிவாகச் சேக்கிழார் சொல்லுகிறார். திருஞானசம்பந்தருடைய வரலாற்றைப் பாடுகிறார் பெரிய புராணத்தில்! மதுரை நகரத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருளியிருக்கிறார். அயல் சமயத்தோடு போர் நிகழப் போகிறது. தம்முடைய சமயத்தையும், தம்நாட்டுப் பண்பையும் நிலை நாட்ட வேண்டிய பொறுப்பு திருஞான சம்பந்தருக்கு வந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சேக்கிழார் விவரிக்கிற பொழுது, 'செழுந்தமிழ் வழக்கு, அயல் வழக்கின் துறைவெல்ல' என்று சொன்னார். ஆக, சைவம் என்று சொல்லாமல், சித்தாந்தச் சமயம் என்று சொல்லாமல், இந்து சமயம் என்று சொல்லாமல், 'செழுந்தமிழ் வழக்கு அயல் வழக்கின் துறை வெல்ல' என்று சேக்கிழார் வருணிக்கின்றார். ஆக, சைவம் என்று சொன்னாலும், சமயம் என்று சொன்னாலும் அது ஒரு செழுந்தமிழ் வழக்கு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அது 'செழுந்தமிழ் வழக்காக' ஒரு காலத்தில் இருந்தது.

திசையனைத்தின் பெருமையெலாம்
தென்றிசையே வென்றேற

வேண்டும் என்றும் சேக்கிழார் பாடுகிறார். அந்தத் துறையில் தமிழை நேசிக்கிறோம் என்று, சொன்னால், ஏதோ நூற்றுக்குச் சில விழுக்காடு தமிழ்ப் பற்றாளர்கள் சமயப் பற்றாளர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களைக் கூட அறிஞர் அண்ணா அவர்களைக் கூட தமிழ் மந்திரம் திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம், 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்ற கருத்து, கொள்கை, கோட்பாடு, ஈர்த்துத் தன்னிடத்திலே ஆட்படுத்தியதால், அவர்கள் மீண்டும் தமிழகத்தில்-மக்கள் மன்றத்தில், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையை வைத்தார்கள். அவர் பிறந்து வளர்ந்த பாசறை ‘கடவுள் இல்லை’ என்று சொல்லுகின்ற