பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/362

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முடியாமல் தவித்தபொழுது நஞ்சைக் குடித்தான். மற்றவர்களுக்கெல்லாம் அமுதத்தைக் கொடுத்தான்; எனக்கு என்ன தோன்றுகிறது என்று சொன்னால்,

நீ நீலமணி மிடற்றொருவன் போல
மன்னுக! பெரும நீயே

அந்தத் திருநீலகண்டன் எப்படிச் சாகாமல் வாழ்கின்றானோ, அதேபோல நீயும் சாகாமல் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறாள். இது சங்ககாலப் பாட்டு, புறநானூற்றுப் பாட்டு, நல்ல தமிழ்ப் பாட்டு என்பதை மறந்து விடக் கூடாது. இப்படி ஏராளமான சான்றுகள் உண்டு நம்முடைய தமிழ், சமயத்தோடுவளர்ந்தது என்பதற்கு. எனவே சமயம், தமிழை வளர்த்தது; தமிழ் சமயத்தை வளர்த்தது.

அதனால்தான் ஏழாம் நூற்றாண்டில் நம்முடைய சிவ பெருமானே வழிவழியாகத் தமிழ் கேட்கிற மரபுக்கு மாறாக வழி வழியாகத் தமிழ் கேட்கிற ஆவலுக்கு மாறாக, பிற மொழிகளின் நுழைவுகளை அவர் நினைத்து சகித்துக் கொள்ள முடியாமல், நாளும் இன்னிசையால், தமிழ் கேட்கும் இச்சையால், காசு நித்தம் நல்கினார். பெருமான் தமிழோடு இசை கேட்கும் இச்சையால், காசு நித்தம் கொடுத்தார் என்று சொன்னால், இறைவனே காசு கொடுத்துத் தமிழ் இசை கேட்க வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது என்று சொன்னால், அன்றைக்குத் தமிழுக்கு மாறான, தமிழ்நெறிக்கு மாறான, தமிழ் இயலுக்கு மாறான ஒரு சமய ஊடுருவல், தமிழகத்தில் நிகழ்ந்திருக்கிறது. திருஞானசம்பந்தருடைய தேவாரம், சுந்தரருடைய தேவாரத்தைப் படித்தால் வரலாற்றுக் குறிப்புகள் நமக்குத் தெளிவாகின்றன. எந்த ஊரில் இருந்து சொல்கிறார்? எந்த ஊரில் கிளிகள் வேதங்கள் சொல்லுமோ, எந்த ஊரில் கிளிகள் மரங்களில் இருந்தவாறு வேதங்களைச் சொல்லி முழங்குமோ, அந்த ஊரில் இருக்கும் இறைவன், 'தமிழோடு