பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/364

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முனைப்பு இருக்கிறதா? பற்று இருக்கிறதா? அதைத் தேடுகிற கூர்மையான புத்திசாலித்தனம் இருக்கிறதா? இவற்றை யெல்லாம் சோதனை செய்வதற்காகத் தாய் விளையாடுகிறாளே தவிர வேறு அல்ல. குழந்தை அழுகிறது என்று சொன்னால் இதோ பார்! இந்தப் பாவித் தாய் குழந்தையினிடத்து கூட வெளிப்படையாக இல்லாமல், ஒளிந்து விளையாடுகிறாளே என்று சொல்லக்கூடாது. அதுபோல ஒளிந்து விளையாடுவது என்பதும் இறைவனுடைய கருணைகளில் ஒன்று. எனவே அவன் வேலை சரியாகச் செய்யாதது போல் நடிக்கிறான். நம்மில் பலர் அப்படி நடிக்கிறோம். நாம் நம்முடைய கடமைகளைச் சரியாகச் செய்யாமல், வாழ்க்கையின் நியதிகளை ஒழுங்காகப் பின்பற்றாமல், நமக்கென்று நியமிக்கப்பட்ட கடமைகளை முறையாகச் செய்யாமல், நாம் சமூகத்தை ஏமாற்றுகிறோம். எனவே யார் கடமையை ஒழுங்காகச் செய்யவில்லையோ, அவர்களை அரசு ஒறுக்கும் என்கிற ஒரு பண்பாட்டை, நியதியை உலகுக்கு உணர்த்துவதற்காக இறைவன் கடமைகளைச் சரியாகச் செய்யாதவன் போலக் காட்டுகிறான். அரசன் அடிக்கிறான்; இறைவன் புண் சுமக்கிறான். பண் சுமந்த பாடலுக்காக என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய காட்சி! அதில் என்ன நடந்தது என்று பாருங்கள்! நாம் என்ன வரலாற்றையா பின்பற்றுகிறோம். நாயன்மார்களையா பின்பற்றுகிறோம்! சிவபெருமானையா பின்பற்றுகிறோம்!

கடவுளை வழிபடுதல் என்று சொன்னால், கடவுள் எதை விரும்புகிறாரோ, நாமும் அந்த நெறியில் நிற்றல் என்பதுதான் நியதி. அதற்குப் பொருள், வழிப்படுதல் என்பதுதான்! இந்த வழியே சென்றால், நிறைய உதவிகளைப் பெறலாம். எந்த வழியை? இறைவன் எந்த வழியைக் காட்டினானோ, அந்த வழியை! இறைவன் நமக்கு என்ன வழி காட்டினான்? பிட்டும் தின்றான். மண்ணும் சுமந்தான். இன்றைக்கு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? பிட்டு