பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/377

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

373


இருவரும் பெற்றோருக்கும் தெரியாமல் புறப்பட்டு விடுகிறார்கள்; திருமருகல் என்ற திருத்தலத்துக்கு வருகிறார்கள். திருத்தலத்திற்கு வந்து திருமணம் செய்து கொண்டு வாழ்வது என்ற முடிவோடு அவர்கள் வருகிறார்கள். இரவாகி விடுகிறது. திருமருகல் கோயில் சாத்தியாகி விட்டது. இருவரும் எங்கோ ஒரு மடத்தில் படுக்கிறார்கள். நெடுந்துாரம் நடந்து வந்த களைப்பில் கடுமையாகத் தூங்கி விடுகிறார்கள். நல்ல-நச்சுப் பாம்பு ஒன்று இரவில் அவனைக் கடித்து விடுகிறது. காலையில் எழுந்து பார்க்கிறாள். தான் திருமணம் செய்ய இருந்த தலைவன்-தலைமகன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறாள். பெற்றோரை இழந்து வந்தாயிற்று. கைப்பிடிக்க இருந்த கணவன் இறந்து போனான். இரண்டு பேரும் தனியே வந்திருந்தாலும், திருமணம் ஆகவில்லை என்ற ஒரே காரணத்தினால் உடற்சார்பு இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள்; தூங்கியிருக்கிறார்கள். எனவே, ‘நான் கணவன் என்ற உரிமையோடு, உன்னைத் தீண்டிக் கூட அழ மாட்டாமல் செய்து விட்டாயே, என்று அழுகிறாள். திருஞானசம்பந்தர் வருகிறார்.

தஞ்சை மாவட்டத்தில் பயணம் செய்பவர்களுக்குத் தெரியும். ஊர் எல்லையிலேயே கோயில்கள் வரவேற்கும். விண்ணளந்து காட்டி வினை மறைக்கும் கோயில்கள் ஏராளம்! ஆனால் அந்தத் திருக்கோயில் நம்முடைய திருஞான சம்பந்தரை ஈர்த்ததைவிட, அழுகிற குரல் அதிகம் ஈர்த்திருக்கிறது. எங்கே அழுகிறார்கள்? ஏன் அழுகிறார்கள்? என்று பதைத்து ஓடுகிறார்; விரைந்து ஓடுகிறார். அங்கே ஒரு பெண் அழுது கொண்டிருக்கிறாள். ஒரு பிணம் கிடக்கிறது. இவர் வருகின்றார்; உடனே இவரும் அழுகிறார்.

அவருடைய அழுகையின் காரணமாக இறை வனுடைய கருணையினால் அவன் எழுந்து நிற்கிறான். திருமணத்தைச் செய்து முடிக்கிறார்; அவர்கள் முகத்திலே