பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/384

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


புத்தடியோம்! புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ!’ என்கிறார். இந்தப் பழைய அடியார்கள் என்று சொன்னால், எப்போதுமே அவர்களுக்கு மமதை இருக்கும்போல் தெரிகிறது. அடியார் என்று சொன்னாலே, ‘அடிபணிந்து செல்பவர்கள்’ என்பதுதான் பொருள்.

தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம்
சமயம் சாரும் ஊழ் பெறலரிது

என்பர். தலைநிமிர்ந்து சுந்தரர் நடந்தபொழுது, அடியார்க் கடியேன்! அடியார்க்கடியேன்; அடியார்க்கடியேன்! என்று தோப்புக்கரணம் போட வைத்தார் சிவபெருமான். ஆனாலும், இன்னும் நம்முடைய நாட்டில் அந்தப் பழவடியார் என்ற போக்கு இருக்கத்தான் செய்கிறது. புத்தடியார்கள் யாராவது வந்தால் எற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இன்னொன்று சொல்ல ஆசைப்படுகிறேன்; இந்த நாட்டில் இருந்தாலும் சரி, எந்த நாட்டில் இருந்தாலும் சரி, பழ அடியார்கள் யாராவது இருந்தால், அவர்களை ஒத்த பழ அடியார்களாக என்னை ஏற்றுக் கொள்ளாது போனாலும், புத்தடியாராகவாவது ஏற்றுக்கொள்ளுங்கள்! அதிலே என்ன பொல்லாங்கு வந்துவிட்டது என்று கேட்கத் தோன்றுகிறது. இந்தச் சூழ்நிலையில் சமயமும், சமுதாயமும் வேறு அல்ல.

கடைசியாக, முடிவாக நான் சொல்லக்கூடிய செய்தி! கடவுளைப் பிரார்த்திப்பது, வழிபாடு செய்வது, தியானிப்பது, எல்லாவற்றிற்குமே நோக்கம். இறைவனுடைய சக்தியை நாம் பெற வேண்டும் என்பதுதான். நான் வழிபடுவதினாலே, கடவுளுக்கு ஒன்று கிடைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. மின்சாரத்தோடு நம்முடைய வீட்டு மின்கம்பி (ஒயர்) தொடர்பு கொள்வதன் மூலமாக, மின்சாரத்திற்குப் பயன் இல்லை; நமக்குத்தான் மின்சாரம் கிடைக்கிறது. அதேபோல, கடவுள் என்ற பரம்பொருளை, குறைவிலா நிறைவாக,