பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/398

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

394

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தொண்டலாது உயிர்க்கு ஊதியமில்லை
என்கடன் பணி செய்து கிடப்பதே!

என்பன போன்ற வரிகள் அப்பரடிகளின் தொண்டுள்ளத்தைத் தெளிவாக்கி நிற்பன. திருமுறைப் பாசுரங்களிலே என்னைப் பிணித்து உருக வைத்தவை மணிவாசகரின் திருவாசக மழையும், திருநாவுக்கரசரது தேவாரத் திருவமுத மழையுமேயாம். நாள்தோறும் நேரங்கிடைக்கின்ற போதெல்லாம் அப்பருடன் அருண்மணி வாசகருடன், பொழுதைப் போக்குவதில் பேரின்பமடைகின்றேன்.

பலர் இறைவனைக் காட்சிப் பொருளாக - கோயிற் பொருளாக-கற்பனைப் பொருளாகக் காண்கின்றனர். ஆனால் திருமுறைச் செல்வர்களோ கருத்துப் பொருளாக அனுபவப் பொருளாக-வாழ்வுப் பொருளாகக் கண்டார்கள். நமக்கும் அப்படியே காட்டுகின்றார்கள். புலன்வழித் தொண்டினால் கடவுள் நெறிகாட்டிப் பொறிவழித் தொண்டினால் மக்கள் சேவையின் மாண்பினை உணர வைத்திருக்கிறார்கள். நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தரின் தீந்தமிழ்க் கவிகள் கருத்தைக் கரைய வைத்துச் சமயச்சார்புடைய சிந்தனைக்கு வித்திடுகின்றன; ஆளுடைய பிள்ளை அருளிய எளிய இனிய தமிழ்ப் பனுவல்கள் அருள்வாழ்வுக்கு நம்மை யாற்றுப்படுத்து கின்றன. குறிக்கோளில்லாது கெட்டொழியும் நமக்கு நல்லதொரு கொள்கைப் பற்றை-இலட்சியத்தை- குறிக்கோளைத் திருமுறைகள் கொடுக்கின்றன; தமிழ் நெடுங் கணக்கிலேயுள்ள உயிரெழுத்துக்கள் பன்னிரண்டினைப் போல் பழமைவாய்ந்த நீண்ட சமயவரலாற்றிலே பன்னிரு திருமுறைகளும் உயிர்போன்றவைகளாகத் திகழ்கின்றன.

துன்பங்களை இன்பங்கள் எனக்கருதும் அறியாமையினால் மனிதன் அல்லலுறுகின்றான்; வீதியிலே நடக்கின்றான்; ஏதோ சில எண்ணங்களினால் தன்னையும் தான் நடந்து