பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/409

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

405


மொழி வழித்தொடர்பே அத்தகைய பலனைத் தருகிறது. இறைவன் பல வழிகளில் தமிழை அனுபவித்துச் சுவைத்திருக்கிறான். காசு கொடுத்தும், தூது நடந்தும் கன்னித் தமிழ் கேட்டதாக வரலாறு பேசுகிறது.

வடமொழியும் செந்தமிழும் வழக்கிழக்க வேண்டியவை யென்றால் வடமொழிக்குக் கொடுக்கப் பட்டதுபோல நம் தமிழுக்கும் இடங்கொடுக்கப் பட்டதா? இல்லையே! தமிழுக்கு இடங்கொடுக்கப்படாவிடில் தமிழர்களாகிய நாம் இடந்தேடி இன்பமடைய வேண்டாமா?

சுரண்டல்களினாலும் - சுயநலத்தினாலும் தமிழின் பின்தங்கியநிலை இப்பொழுது சமயத்துறையில் அருக ஆரம்பித்து விட்டது. இந்நிலை நல்லதொரு மாற்றத்தினை உருவாக்கி உண்மை நெறி உலகெல்லாம் பரவ உதவும் எனக் கருதி வாழ்த்தி விடை பெறுகிறோம்.


பொகந்தலாவையில்


தலைமுறை தலைமுறைகளாக நாடுவிட்டு நாடுவந்து உழைக்கிறீர்கள். ஆனால் உழைப்பின் பயனை அனுபவிப்பதாகக் காணோம். உடலை வருத்தி வெய்யிலும், மழையும் துன்புறுத்த மலைக்கு மலை தாவித் தேயிலை எடுக்கிறீர்கள். காலை முதல் மாலை வரை அவதியுறுகிறீர்கள். துன்பம் காலப்போக்கில் களிப்பையும் சுகத்தையும் கொடுக்கும் என்பர். ஆனால் உங்களைப் பொறுத்தவரை மருந்துக்குக் கூட மகிழ்ச்சியைக் காணோம்.

நூற்றியிருபத்தைந்து ஆண்டுகளாக இலங்கைவாழ் மக்களின் பொருளாதார வளத்துக்கும், வனப்புக்கும் உங்களது உழைப்புப் பயன்பட்டதையும்-இப்போது பயன் விளைவிப்பதையும் நினைக்க நினைக்க நெஞ்சம் பூரிப்படைகிறது. உங்களை நீங்கள் உயர்த்தாத நிலைபற்றி இங்கு கவலையோடு திரு. வெள்ளையன் கசிந்துரைத்த வார்த்தைகள்