பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/429

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

425


என்ன பாடுபடும். ஆன்மாக்களுக்கு அருள்சுரக்கும் ஆண்டவன் அதைப் பொறுப்பானா?

எனவே, மனித வாழ்வின் குறிக்கோள் உணர்ந்து ஆன்ம சுத்தியுடன் அருளியல் வாழ்வு வாழ்ந்து பயனடைய முன்வர வேண்டும். இந்தப் பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்க கருணைக்கடலான, இறைவனின் ‘தாள்’ என்னும் தெப்பத்தில் ஏறிக்கொள்ளவேண்டும். “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்” என்கிறார் வள்ளுவர்.

உருவங்களைக் கடவுளாகவே கருதி வழிபட வேண்டும். இறைவனிட்ம் உள்ளம் ஒன்றி நிற்க, கடவுளைக் காட்டும் உருவம் உண்மையான கடவுளாகக் காணப்படும். கடவுட் கொள்கை உயிர்ப் பலியை வெறுக்கிறது. எல்லா உயிர்களுக்கும் தந்தையான மங்கைபங்கன் சில உயிர்களை வதைத்துப் பலியிடுதலைப் பொறுக்கமாட்டான். பலியிடும் பழக்கம் ஒழிந்து மறையச் சைவ உலகம் தீவிரமாக முனைதல் வேண்டும் என்று கூறி வாழ்த்தி விடை பெறுகிறோம்.


மணிபல்லவத்தில் (நயினாதீவு)


இன்று அறிவியலார் மின்னல் வேகத்தில் முன்னேறிச் செல்கிறார்கள், புதியன கண்டு - அவற்றிற்கு அளவுகடந்த வரவேற்பளிக்கின்றார்கள். பழமையை வெறுக்கின்றார்கள். இன்றைய உலகம், புதுமையுமற்று - பழமையுமற்று இரண்டுங் கெட்ட நிலையிலே நிற்கிறது. மேலை நாட்டில் புதியன வளர்ந்து வருகின்றன. ஐன்ஸ்டீன் கருத்து பைபிளை விலக்கிச் செல்கின்றது. பைபிள் புதியவற்றிற்கு மாறுபட்டபோதும் உயிர் வாழ்கின்றது; அதன் பழமை பாராட்டப்படுகின்றது. நம்மவர் புதியன கண்டு நமது பழைய சமயச் செய்திகளை, நையாண்டி செய்கிறார்கள். நம்மிடையே பழமை வளர வில்லை; சடங்குகளே வளர்கின்றன. அவற்றின் பலன்