பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

53


35. திருவாசகம், திருச்சதகம், 90.
36. திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 312.
37. சிவஞானபோதம் சூத்திரம், 12.
38. திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி, 7.
39. குறள், 422.
40. திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 781.
41. திருவருட்பா, தெய்வமணி மாலை, 8.
42. திருமந்திரம், 109




2. சமய மறுமலர்ச்சி


இன்றைய நமது சமயநிலை


நமது சமயம் சிவநெறி, திருமால் நெறி, திருமுருகன் நெறி என்றிவ்வாறு அறுவகைச் சமயநெறிகளாயிற்று. ஆயினும் இந்த அறுவகைச் சமயங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் மிகக் குறைவு. சிவநெறி, திருமால்நெறி இவற்றினிடையே தத்துவங்களின் வழியிலும் இறைநிலையிலும் வேறுபாடுகள் உண்டு. ஆயினும் இன்று வைணவ சமயத் தலைவர்கள் காட்டும் அளவு, சைவ-வைணவத்துக்கிடையே வேறுபாடுகளில்லை. வைணவர்கள், அவர்களின் நெறியில் தோன்றிய வடகலை, தென்கலை வேறுபாட்டைக் கூடப் பெரிதுபடுத்தி வருகின்றனர். உண்மையிற் சொன்னால் அவர்கள் வைணவத்துக்குச் செய்யும் பணியை விட வேற்றுமைகளுக்கே அதிகப்பணி செய்து வருகின்றனர். இல்லையானால், இந்த இருபதாம் நூற்றாண்டில் “யானைக்கு எந்த நாமம் போடுவது” என்று வழக்கு மன்றம் ஏறுவார்களா? நினைத்தாலே நெஞ்சைச் சுடும் செய்தி.

சிவநெறிக்கும் மற்ற சமயங்களுக்குமிடையே உள்ள வேறுபாடு, வழிபடு கடவுளின்வழி அமைவதேயாம். இடை