பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் சைவ வினா விடையில் கூறியுள்ளமை அறிக.

திருவிழிமிழலைத் திருக்கோயிலில் “செந்தமிழர்கள் மறை நாவர்கள், கலைநலம் தெரிந்தவர்கள், குணத்திற் சிறந்த ஞானிகள் ஆகியோர் ஒருங்குகூடி அர்ச்சனைகள் செய்தனர்”19 என்று திருஞான சம்பந்தர் தேவாரம் கூறுகிறது. திருப்பழுவூர்த் தேவாரத்தில் மலையாளிகள் கூட வந்து வழிபட்டதாகத்20திருஞான சம்பந்தர் அருளிச் செய்துள்ளார்.

அப்பரடிகள் திருவையாற்றுப் பதிகத்தில் “திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட அடியார்கள், புனலும் பூவும் சுமந்துகொண்டு ஒருவர் பின் ஒருவராகச் சென்று புகுந்ததையும் அவர்கள் பின்னே, வந்த ஒழுங்கு வரிசையில் தாமும் செல்வதையும் குறிப்பிட்டு அருளிச் செய்துள்ளார்.21

ஆதலால், திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனைத் தகுதியுடைய அடியார்கள் அனைவரும் புனலும் பூவும் சொரிந்து வழிபாடு செய்து கொண்டமையை அறியலாம்.

அடுத்து, சேக்கிழார் அருளிச்செய்த பெரிய புராணமும் இந்த உண்மையை உணர்த்துகிறது. திருச்சாத்த மங்கையில் வாழ்ந்த திருநீலநக்கநாயனார் என்ற மறையவர் குலத்துப் பெரியவர், நாள்தோறும் தமது மனைவியுடன் திருச்சாத்தமங்கையில் பதிகம் பெற்ற அயவந்தீச்சுர்த்தில் எழுந்தருளியுள்ள இறைவனுக்குத் திருமுழுக்குச் செய்தும் திருவமுது செய்வித்தும் வழிபாடு செய்து கொண்டமையை பெரிய புராணம் கூறுகிறது.22

அடுத்து, வேளாளர் குடியைச் சேர்ந்த அரிவாட்டாய நாயனார் நாள்தோறும் திருக்கோயிலுக்குள் எழுந்தருளியுள்ள பெருமானுக்குச் செந்நெல் அரிசித் திருவமுதும்,