பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

115


இலட்சக்கணக்கான புரட்சித் தொண்டர்களுக்கு லெனின், மாமேதையாகவும் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்க வில்லையா? மார்க்சு வாழ்ந்த காலத்திலும் இன்றும் எண்ணற்ற தொழிலாளர்களுக்கும் முற்போக்குச் சிந்தனை யாளர்களுக்கும் சிறந்த ஒளி விளக்காகத் திகழவில்லையா? அது போலச் சைவ சித்தாந்தம் காட்டுகிற இறைவன் உயிர்க்கு நல்ல தோழனாய், ஆசிரியனாய் அமைந்து அழைத்து வழிகாட்டிச் செல்கிறான் என்று கருதப்படுகின்றதே தவிர அவன் ஒரு உயர் பொருளாக மட்டும் கருதப் பெறுவதில்லை. சுந்தரர்,

“ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி
மாழையொன் கண்பரவையைத் தந்தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே”16

என்று பாடியிருப்பது அறிக. இறைவனுடைய துணையால் பெறும் அறிவுதான் ஞானம். அதாவது பேரறிவு என்று பாராட்டப்பெறுகிறது. ஆதலால், உயிர்கள் அறிவு பெறுவது முதற்கடமை, உழைக்கும் ஆற்றலும், உழைப்பின் வழித் தொழிலியற்றலும் அவ்வழி அறிவை விரிவு செய்தலும் உயிர்களின் இயல்பாகும். இம்மூன்று நிலையும் சைவ சித்தாந்தத்திற்கும் மார்க்சியத்திற்கும் இசைந்த நிலையாகும்.

ஒருமைப்பாட்டை உணர்த்தும் உயர் தத்துவங்கள்

நாடு, மொழி, இனம், மதம் ஆகியன மனிதனுக்குப் பிறப்பின் காரணமாகத் தற்செயலாக வந்தமைந்தன. இவற்றை எளிதில் மனிதன் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒப்பற்ற மனித குலத்திலிருந்து மனிதன், எந்தக் காரணத்திற்காகவும் தன்னைத் தனி நிலையிலும் சரி, பொது நிலையிலும் சரி, ஒதுக்கியோ ஒதுங்கியோ வாழ்தல் கூடாது. தமிழ்நாட்டிற் பிறந்த ஒருவர், தமிழைக் கற்றறியாமல் சூழ்நிலையின் காரண