பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்
அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்
எவரெவர்க் குதவினர் எவரெவர்க் குதவிலர்
தவரவர் நினைவது தமை உணர்வதுவே” 28

என்று அருளியுள்ளமையால் அறிக.

மேலும், இப்பிறப்பிலேயே சார்ந்து துய்க்கக் கூடிய வினைகளும் உண்டு. அடுத்த பிறப்புகளுக்குத் தொடர்வனவும் உண்டு. சராசரி அறிவோடு நோக்கினால் கட்புலனுக்கு எளிதாகத் தெரியக்கூடிய பயன்கள் இப்பிறப்பிலேயே துய்க்கக் கூடியனவாக அமையக் கூடும். இப்பொழுது, இந்தத் தலைமுறையில் நம் கண் முன்னே தெரிகிற வெளிச்சமான ஓர் உண்மை உழைப்பாளிகள் உழைக்கிறார்கள்! உலகம் முழுவதும் நுகர்வதற்குரிய பொருள்களைப் படைத்து அளிக்கிறார்கள்! ஆனால், உழுது உலகத்திற்கு உணவளிப்பவன் போதிய உணவில்லாமலும், உலகு உடுத்துமகிழ உடை கொடுப்பவன் போதிய உடையில்லாமலும், மகிழ்ந்து கூடியிருக்க இல்லம் அமைத்துக் கொடுத்தவன் வசதியான இல்லம் இல்லாமலும் வாழும் நிலையினை இன்று காண்கின்றோம். மதிப்புடைய - பயன்பாடுடைய உற்பத்தி செய்தற்குரிய திறனை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதாவது சித்தாந்த மரபின்படி அவர்களுடைய ஊழ் நன்றாகவே அமைந்திருக்கிறது. ஆனால், இப்பிறப்பில் அவர்களுடைய உழைப்புச் செல்வத்தை அவர்களிடமிருந்து தட்டிப் பறிப்பதை எங்ஙனம் ஊழாகக் கருதமுடியும் ? இங்ஙனம் பிறர் பங்கை எடுத்துக் கொள்வது நெறிமுறையன்று என்று கருதிய அரசுகள் இயற்றிய சட்டங்கள் மூலம் உழைப்பாளர்களுக்குரிய பங்குகிடைத்து வருவதைப் பார்க்கிறோம். இதனால் ஏழை - பணக்காரன் வேறுபாடு ஊழின்பாற்பட்டதன்று என்பது உறுதியாயிற்று. கண்