பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

145


நூல்களும் திருவள்ளுவர்ர இயற்றிய திருக்குறளும், ஜேம்ஸ் ஆலன் இயற்றிய வாழ்க்கை நூல்களும் குறிப்பிடத்தக்கன.

வாழ்க்கை வளமானதாக அமைய வலிமை வேண்டும். வலிமை இருவகைத்து. ஒன்று உடல் வலிமை, பிறிதொன்று மனவலிமை. உடல் வலிமையாவது எத்தகைய கடுமையான முயற்சிக்கும் பயன் படக்கூடிய நிலையில் உடல் அமைந்திருத்தல். உடலுக்கு வலிமை, அதை முற்றாகப் பயன்படுத்துவதன் மூலமே வந்து சேர்கிறது. பயன்படுத்தப்பெறாத உடலுறுப்புகள் வலிமை இழக்கும். உடலில் அறிவுக் கருவிகள் (புலன்கள்) ஆனாலும் சரி, செயற் கருவிகள் (பொறிகள்) ஆனாலும் சரி, அவற்றைப் பயன்படுத்துவதன் மூலமே அவை வலிமை பெறுகின்றன. ஆதலால் நம்முடைய உடலுறுப்புகள் ஒவ்வொன்றையும் முறையாகச் செயற்பாட்டில் இயக்கி வலிமை சேர்க்க வேண்டும். சிந்திக்கப் பழகினால் மூளை சிறப்படையும். சிந்திப்பது எளிதான காரியமா? கண்ணுக்குத் தெரிகின்றவைகளையே கண்டு தேர்ந்து தெளிந்து வாழ்க்கை நடத்துவதில் பயிற்சி பெறாதவர்கள் கட்புலனுக்கு வராமல் மறைவாகக் கிடக்கும் பொருள்களை - பொருள்களின் ஆற்றல்களை எங்ஙனம் காண்பர்? அவற்றைக் காண்பதற்குச் செய்யும் முயற்சியே சிந்தனை. சிந்தனைக்குத் தடை முளைச் சோம்பல். பழைய நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், சுற்றுச் சூழ்நிலைக்கு அஞ்சுதல் ஆகியன. இவை சிந்தனைக்குப் பகைப்புலங்கள். இவைகளைக் கடந்தும் மனிதன் சிந்திக்க வேண்டும். அப்பொழுதுதான் வளமான வாழ்க்கை வந்தமையும்.

அடுத்து உடலை இயக்கும் தலைமை மனத்தினிடம் இருக்கிறது. மனம் இயல்பாக மிகவும் கெட்டது. அது எளிதில் எல்லாச் செய்திகளையும் சென்று பற்றும்; ஆசைப்படும்; உணர்ச்சிவசப்படும். மனத்தை, புத்தியைக் கொண்டும் சிந்தனையைக் கொண்டும் அடக்கி ஆளவேண்டும். மனம், புத்தி சிந்தனைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்குமானால்