பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

177


உய்யும் நெறி உழைத்தலே!
உய்யும் நெறி உணர்வு சிறத்தலே!
உய்யும் நெறி ஊழின் வலிமை மடக்குதலே!

“மக்கள் சிந்தனை” 15-9-80


வேறுபாடற்ற வாழ்க்கையே
சமய வாழ்க்கை


அறிவு, உணர்வு, உழைப்பாற்றல் மானிட சாதி அனைத்துக்கும் ஒப்ப அமைந்து விடுவதில்லை. சில வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் இருத்தல் இயற்கை. உண்ணும் பொருள்களில் சுவை வேறுபாடுகள் இல்லையா? சுவை வேறுபாடுகளை மனிதன் மதிநுட்பத்துடன் கையாண்டு கூட்டுகின்றவாறு கூட்டியும் சமைக்கின்றவாறு சமைத்தும், சுவைக்கின்றவாறு சுவைத்தும் மகிழக் கற்றுக் கொள்ளவில்லையா ? சுவை வேறுபாடு கருதியும் பொருந்தாச் சுவை கருதியும் எப்பொருளை மனிதகுலம் இழக்கத் துணிகிறது! அது போலத்தான் இயற்கையில் அமைந்த மனிதகுல வேறுபாடுகளையும் கருதவேண்டும்.

எல்லாருக்கும் ஒரு மாதிரியான உயிரணுக்கள், கரணங்கள், பொறிகள், புலன்கள் அமைந்து விடுவதில்லையே! இதில் பரம்பரை, அளவுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தத்தான் செய்கிறது. அதனால் பரம்பரைத் தன்மை மாற்றமுடியாதது என்பது கருத்தன்று. பரம்பரைத் தன்மையை மாற்ற வளரும் சூழ்நிலை வாய்ப்புள்ளதாக அமையவேண்டும். நடைமுறையில் பரம்பரைகளின் தகுதி நிலைகளுக்கு ஏற்பத்தான் சூழ்நிலைகளும் அமைகின்றன. இஃது இன்றைய நடைமுறையில் இயற்கை-சிக்கல், ஏன், தாழ்த்தப்பட்டவர்களின் குழந்தைகள், இளைஞர்களின் வாழ்க்கையிலுள்ள பரம்பரைத் தன்மையை மாற்ற அரசு