பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

195



இராமநாதபுரம் மாவட்டப் பிரச்சனையிலும் இதே நிலைதான். காஞ்சிபுரம் புதுப்பெரியவாள் கேட்டுக் கொண்டதன் பேரில் குன்றக்குடி அடிகளார் சென்றார் என்று பத்திரிகைகளில் செய்தி வருகிறது. காஞ்சிபுரம் புதுப் பெரியவாள் கேட்டுக்கொண்டதன் பேரில் நாம் செல்வதில் குறையிருப்பதாக நாம் நினைக்கவில்லை. ஆனால் உண்மை அதுவன்று. ஆக, ஏதோ இந்து சமயத்தில் அவர்களுக்கு மட்டுமே அக்கறையிருப்பது போலக் காட்டிக்கொள்ளும் போது கொஞ்சம் மனச் சங்கடம் ஏற்படுகிறது. வளர்ந்த மதத் தலைவரிகளிடையேகூட பரஸ்பரம் நல்லெண்ணத்தையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ளாமல் இந்து சமூகத்திற்கு விளைந்துள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது எளிதல்ல என்று காண்கிறோம்.

‘மக்கள் சிந்தனை’ —15.7.81


மத மாற்றங்கள் இன்று
செய்ய வேண்டியது என்ன?

நம் நாட்டில் இங்கும் அங்கும் பரவலாக இந்து அரிசனச் சகோதரர்கள் மதம் மாறுவதற்குரிய அடிப்படைக் காரணங்களைக் கண்டு ஆராயவேண்டும். அங்ஙனம் கண்டு ஆராயாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் “கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக மதம் மாறுகிறார்கள்; பணத்தாசையால் மதம் மாறுகிறார்கள்” என்றெல்லாம் பழி தூற்றுவது அறமன்று. நம்மைப் பொறுத்தவரையில் காரணங்கள் இல்லையென்று கருதவில்லை. ஆனால் மதம் மாறிச் செல்லுகிற அளவுக்குப் போதிய காரணங்கள் இல்லையென்றும் கருதுகின்றோம்.

தீண்டாமை என்பது இந்து நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று. இந்து மதத்தின் குறைகளில் ஒன்று, தமிழ்நாட்டுச் சமய நெறிகளாகிய சைவம், வைணவம் இந்து மத அமைப்பில்