பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

215


ஒருங்கிணைந்து கொண்டு, உழைப்பாளர்களைத் துன்புறுத்தின.

இந்தச் சுரண்டலும் ஆதிக்கமும் என்றென்றும் நிலைபெற வேண்டி, மனித குலத்திற்குள் எண்ணத் தொலையாத சாதிப் பிரிவுகளைத் தோற்றுவித்து, அவர்களுக்குள் அழுக்காற்றினை வளர்த்தும் குழுச் சண்டைகளை உருவாக்கியும் இழிபடு வாழ்க்கைக்கு வித்திட்டனர். இதனால் மனித குலத்தில் முக்கால் பங்குக்கு மேல் தாழ்த்தப்பட்டவர்களாக் கப்பட்டனர். இவர்களுக்குத் திருக்கோயில் வழிபாட்டுரிமை இல்லை. கல்வி இல்லை ஏன்? நாகரிகமாக உடுத்துதல்கூடக் கூடாது என்ற தடை இந்த இழிநிலைமைகளைக் கண்டு மனம் வெம்பிய சில சமய ஞானிகள், இந்தச் சமுகக் கொடுமைகளைக் களைந்து சமயத்தைச் சமுதாயத்திற்காக்க முனைந்தனர். திருமுறைக் காலத்தில் இந்த முயற்சிகள் தோன்றின. பின் வள்ளலார்! அதன் பின் காந்தியடிகள்! அதற்கும் பிறகு தந்தை பெரியார்! இவர்களெல்லாம் தோன்றி, மனித உரிமைக்காகப் போராடினார்கள். ஆனால் மதத்தலைவர்கள் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. இதனால் நாடு முழுவதும் இந்து மதத்திலிருந்து வெளியேறிய கடவுள் நம்பிக்கையுடையவர்கள், புது மதங்கள் புதுநெறிகள் கண்டனர். மதத்தின் நடைமுறைகளை-மதத் தலைவர்களின் மனப்போக்கை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் மதத்தைவிட்டு வெறியேறி, நாத்திகர்கள் ஆயினர். இவர்கள் தோன்றி, போராடித்தான் ஆதிதிராவிடர்களுக்கு ஆலய நுழைவுரிமை பெற்றுக் கொடுத்தார்கள்; கடவுட் சிந்தனையாளர்களின் அங்கீகாரத்துடன் அல்ல- சட்ட மன்றங்களின் அங்கீகாரத்துடன்! இந்தச் சூழ்நிலையிலும் ஆதிதிராவிடர்களின் ஆலய நுழைவை இந்துமதத் தலைவர்கள் ‘நடமாடும் தெய்வங்கள்’ எதிர்த்தார்கள். ‘அரிசனங்கள்-ஆதிதிராவிடர்கள் நுழைந்த கோயிலுக்குள்