பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/230

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மத வளர்ச்சி

ந்திய நாட்டில் உள்ள மதங்களுக்கிடையில் வளர்ச்சிப் போட்டிகள் ஏற்பட்டுள்ளன். நலம் நிறைந்த போட்டிகள் வரவேற்கத் தக்கனவே! ஆனால் நமது நாட்டில் நிலவும் போட்டிகள் நிறைநலமுள்ள போட்டிகள் அல்ல என்று மதமாற்றங்கள், மண்டைக்காடு கலவரம், மீனாட்சிபுரம் கலவரம், இராமநாதபுரம் கலவரம் ஆகியன கூறுகின்றன.

மதங்களின் வரலாறு

மனிதன் சிந்திக்கத் தொடங்கிய உடனேயே தோன்றியது கடவுள் நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை தோன்றிப் பலநூறு ஆண்டுகள் வளர்ந்த பிறகே கடவுள் நம்பிக்கை அடிப்படையில் மதங்கள் தோன்றின; மதத் தலைவர்களும் புரோகிதர்களும் தோன்றினர். மத நிறுவனங்கள், சொத்துக்களும் அதிகாரமும் உடைய நிறுவனங்களாக வளர்ந்து சமுதாயத்தில் நிலையான இடத்தைப் பெற்றன. காலப்போக்கில் மதத் தலைவர்களின் ஆதிக்கமும் சுரண்டல் தன்மையும் மக்களிடத்தில் வெறுப்பை வளர்த்தன. இந்தச் சூழ்நிலையில்தான் அரசுகள் தோன்றுகின்றன. தொடக்கக் காலத்தில் மதத் தலைவர்கள் அரசியல் அதிகாரங்களையும் தம்மிடமே வைத்திருந்தனர். பின் சமுதாயத் தலைவர்கள் தோன்றி மதத் தலைவர்களிடமிருந்து விடுதலைபெற அரசியல் ஆதிபத்தியத்தைப் பெற முயன்றனர். சிலகாலம் மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் கூட்டாக ஆட்சி செய்தனர்.

மத ஆதிக்கச் சண்டைகள்

இந்த நெடிய வரலாற்றுப் போக்கில் மதங்களிடையில் ஏற்பட்ட ஆதிபத்தியச் சண்டைகள் மனிதகுல வரலாற்றுக்கு