பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/257

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

245



உயிர்கள் அறிவித்தால் அறியுத்தன்மையன; சார்ந்ததன் வண்ணம் ஆம் இயல்பின. இயல்பாகவே ஆன்மா ஆணவத்தைச் சார்ந்து இருக்கிறது. ஆணவப் பிணிப்பால் அறியாமையிற் கிடக்கும் ஆன்மாவுக்கு-உயிருக்கு மாயையின் துணையால் பொறி புலன்களைத் தந்து ஆட்கொண்டருள் கின்றான் இறைவன். உயிர்கள் புலன்களாலும் பொறிகளாலும் நுகர்வன நுகர்ந்து, இன்ப துன்பங்களை அனுபவித்து அவ்வழிச் செல்களும் செய்கின்றன. செயல்களைச் செய்யும் பொழுது உயிருக்குள்ள உணர்வு நிலை, நுகரும் பொழுதுள்ள மனப்பாங்கு நிலை முதலியனவே வினைகளாகி அந்த வினைகளை - அந்தச் செயல்களின் பயன்களைச் செய்த உயிர்களே அனுபவிக்க வேண்டும் என்ற நியதியாகி-விதியாகி உயிர்களின் ஊழாகி உயிர்களைச் சார்கின்றன. விதி என்ற சொல்லுக்குச் சரியான விளக்கம் ஒவ்வொரு முயற்சிக்கும் ஏற்ற பயன் நிச்சயம் கிடைக்கும் என்பதுதான். விதி -கொச்சைப் படுத்தக்கூடிய ஒரு தத்துவம் அல்ல. ஆனால் நடைமுறையில் விதி கொச்சைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் மனிதன் எதையும் செய்யலாம்; எப்படியும் செய்யலாம் என்ற நிலைக்கு வந்து ஊழல்களுக்கும் ஒழுக்கக் கேடுகளுக்கும் வன்முறைச் செயல்களுக்கும் இரையாகி, அழிந்துகொண்டிருக்கிறது இந்த மானுடம். செய்வினைகளும் நுகரும்பொழுது கொள்ளும் எண்ணத் தடங்களுமே ஊழ் என்று பெயர் பெறுகின்றன. செய்யும் செயல்களையும் நுகரும் நுகர்ச்சியையும் தற்சார் பின்றியும் தற்சார்பான பயன்களின் மீது வேட்கையின்றியும் இயற்றினால் - நுகர்ந்தால் ஊழ் முகிழ்க்காது - உருக் கொள்ளாது. உயிர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறலாம்-இன்ப அன்பில் தங்கலாம்.

ஆணவம் இருளனையது இல்லை, இல்லை; ஆணவம் இருளைவிடக் கொடியது. இருள் தன்பாற்பட்ட பொருள்களை மறைக்கும். ஆனால் இருள் உயிர்கள்