பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/260

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஈடுபடவேண்டும். சிவகாமமும் செந்தமிழும் தழுவிய ஒரு குலத்தைக் காணவேண்டும். மனித நேயத்தைப் போற்றிப் பேணவேண்டும்.

“வான்முகில் வழாஅது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலா துயிர்கள் வாழ்க!
நான்மறை அறங்க ளோங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்!”

-கந்தபுராணம்.

கச்சியப்ப சிவாச்சாரியாரின் இந்தப் பாடல் பலகாலும் எண்ணத்தக்கது. திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும். ஓதவேண்டும், சைவத்தின் இலட்சியம் இந்தப் பாடலில் வகுத்தும் தொகுத்தும் கூறப்பட்டுள்ளது. “நீரின்றமையாது உலகு” என்பது திருக்குறள். ஆதலால் முதலில் மழை வளத்தைப் பெற்றுத் தண்ணீர் தேவையை நிறைவு செய்து கொள்ளவேண்டும். முற்காலத்தில் நிறைய மழை பெய்தது. இறைவனின் திருக்கோயில்கள் ஒவ்வொன்றும் மழைவளம் தரும் மரக்காடுகளின் நடுவே இருந்தன. கடம்பவனம், அரசவனம் என்ற பெயர்களை நோக்குக. தலவிருட்சம் என்று ஒரு குறிப்பிட்ட மரத்தைப் போற்றுதல் பழைய மரபு. காலஞ் செல்லச்செல்ல தல விருட்சங்களையும் திருக்குளங்களையும் (தீர்த்தம்) பேணத் தவறிவிட்டோம். அதன் காரணமாக மழைக்குறைவு ஏற்பட்டுள்ளது. தலவிருட்சங்களைப் பல நூறாயிரக் கணக்கில் காடுகளாகப் பேணி வளர்க்க வேண்டும். மழைவளம், மண்ணின் வளம் கொழிக்கத் துணை செய்யும். உண்பன தின்பன தாராளமாகக்கிடைக்கும். அரசுகள்