பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/263

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

251


அவை வரலாற்றுப் போக்கில் எதிர் விளைவைத் தந்துள்ளன. இந்தப் பூமண்டலத்தில் இனக்கலப்பு இல்லாது வாழும் இனம் எதுவும் இல்லை. உணர்வுக் கலப்பு-கலைக் கலப்புகுருதிக் கலைப்பு இன்ன பிற கலப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவிற்கு வந்த இஸ்லாமியர்கள் இந்திய மயமானார்கள் என்பதே வரலாற்று உண்மை. இந்தியாவைத் தங்கள் தாய் நாடாக அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்தியாவிலேயே இந்தியப் பெண்களை மணந்துகொண்டு வாழத் தலைப்பட்டனர். எல்லாரும் ஒரே உடன்பிறப்பினராய் வாழவேண்டும். என்ற கொள்கையை வலியுறுத்தவே கம்பன்,

“குகனொடும் ஐவ ரானோம்
முன்புபின் குன்று சூழ்வான்

மகனொடும் அறுவ ரானோம்
எம்உழை அன்பின் வந்த

அகன்அமர் காதல் ஐய
நின்னொடும் எழுவர் ஆனோம்

புகல்அரும் கானம் தந்து
புதல்வரால் பொலிந்தான் நுந்தை”2

என்று பாடுகின்றான்.

எல்லா உலகமும்-எல்லா உலகின்கண் வாழும் மக்களும் ஒரு குலமே! ஓரினமே என்ற கருத்தினை,

“எல்லா உலகமும் ஆனாய் நீயே”3

என்ற அப்பரடிகள் பாடலால் அறிந்துகொள்ள முடிகிறது. “எவன் கடவுள் படைப்பில் உள்ள மக்கள் அனைவரையும் தன் பிள்ளைகளைப் போலக் கருதுகிறானோ அப்பொழுதே அவன் சூபியாவான்”[1] என்பது இஸ்லாமிய-மூதுரை. அருட்டிரு விவேகானந்தர், “இராமகிருஷ்ண ஆசிரமங்களில் முஸல்மான் பாலகர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்;

  1. 4