பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/265

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

253


வில்லாத்தன்மை உடையது. நிறைவு என்பது எது? குறைவே இல்லாதது. இன்பம் என்பது எது? துன்பக் கலப்பே இல்லாததுவே இன்பம். குறைரு இல்லாததுவே இன்பம். குறைவு இல்லாத ஒன்றே நிறைவு! தீமையின் கலப்பே யில்லாத ஒன்றே நன்மை! முழுமையான நன்மை மக்கள் பழக்க வாசனையின் காரணமாகத் தீமை கலந்த ஒன்றையும் நன்மையென்று கருதும் கருத்திலிருந்து விலக்கிக் காட்டவே “நன்றுடையான்” என்று கூறியதுடன் அமையாது “தீயதில்லான்” என்றும் கூறினார். தீமையின் கலப்பில்லாத நன்மை எதுவொ அதுவே நன்றாம். அத்தகு நன்மை நலம் சார்ந்த கடவுள் எங்கும் உள்ளார். அவருக்கு ஏன் திருக்கோயில், மசூதி, சர்ச்சு முதலியன?

மனிதகுல வரலாற்றில் காலமும் தூரமும் அதிகமானதைப் போலவே, காலப் போக்கில் ஒவ்வொரு இன மக்களும் அடுத்த இனமக்களுக்கிடையே நீண்டஅகலமான இடைவெளியை உண்டாக்கிக்கொண்டனர். அதனால் மொழிகள் பலவாயின; பல்வேறு சமயங்களாயின; ஆயினும் மூர்க்கர்கள், பைத்தியக்காரர்கள், பிழைப்பு நடத்துகிறவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் கடவுள் ஒருவரே என்று நம்பினார்கள். மாணிக்கவாசகர் சிவநெறிச் சார்பினர். சிவபக்தர். அவர்,

“தென்னா டுடைய சிவனே போற்றி!
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி!”[1]

என்றார். மாணிக்கவாசகர் வாழ்ந்த தமிழ்நாட்டில் கடவுளைச் “சிவன்” என்று அழைக்கின்றனர். ஆனால் அந்தச் சிவன் உலகமாந்தருக்கு “இறைவனாக விளங்குகின்றான் என்பது விளக்கம். முன்னையது பழக்கத்தால் ஏற்பட்ட சிறப்புப் பெயர்; பின்னையது உலகப் பொதுப் பெயர். எந்நாடு என்பதில் தென்னாடும் அடங்கியது. எந்நாட்டிற்கும் இறைவனாக இருப்பவனைத் தென்னாட்டு மக்கள் “சிவன்"

  1. 7