பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/266

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று அழைப்பது மொழிவழக்கேயாம். பொருள் வேறல்ல என்பது உணர்க. உலகிற்குக் கடவுள் ஒருவரே. அந்தக் கடவுளுக்கு உருவம் இல்லை. பெயருமில்லை. ஆனால், உலகமாந்தர் அவனுக்கு எண்ணற்ற பெயர்களைச் சூட்டி அழைக்கின்றனர். ஏன்? “பித்தன்” என்ற பெயரைக்கூடச் சூட்டி அழைக்கின்றனர். “ஈசுவரன் ஒருவரே. அந்த ஒருவரைத்தான் இராமர், அல்லா என்றெல்லாம் அழைக்கின்றனர். அந்த ஒரே ஒரு கடவுள்தான் உலகத்தைத் தாங்குகிறார். அவருக்கு அடுத்து இரண்டாமவர்கூடக் கிடையாது” என்றார் கபீர். மசூதியிலும் திருக்கோயிலிலும் இருந்தருள் செய்பவர் ஒரே கடவுள்தான் என்பது கபீரின் வாக்கு.

“சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
பித்தர்என்ற பெயர் படைத்தார்க்கு எப்பெயர் ஒவ்வாதோ?”9

என்பார் அருட்பிரகாச வள்ளலார். இந்துக்களால் “பிரம்மம்” எனவும் சொராஸ்திரியரால் “அஹ-சா மஸ்தா” எனவும் பெளத்தர்களால் “புத்தர்” எனவும் யூதர்களால் “எகோவா” எனவும் கிறிஸ்துவர்களால்- “பரமண்டலத்தில் உள்ள தந்தை” எனவும் வழங்கப்படுகின்ற தெய்வம், உங்களது மேலான எண்ணம் நிறைவேறும்படி உங்களுக்கு வலிமையைத் தருவதாக”[1] என்று விவேகானந்தர் வாழ்த்தும் பாங்கினை அறிக “அல்லா” என்ற சொல் முஸ்லீம் மதத்தையும் “இராமர்” என்ற சொல் ஹிந்து மதத்தையும் மட்டும்தான் குறிக்கும் என்றால் அப்படிச் சொல்பவர்களிடமிருந்து தூரவிலகி நிற்கவே விரும்பு” என்றார் கபீர்[2] ஏன்? “எல்லா ஒன்றே” என்ற தன் கருத்துக்கு ஒத்துவராதவரிடம் கபீர் கண்டிப்பாகவே இருக்கிறார். எல்லா மதங்களிலும் பேசப்

  1. 10
  2. 11