பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/272

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று நீலகண்ட சாத்திரிகள் எழுதுகின்றனர். யூதர்கள் இயேசுவைத் தள்ளிவிட்டனர். ஆனால் சாக்கியரை ஏற்று நாயன்மாராக்கியது நமது நாடு. நமது நாட்டு மக்களிடத்தில் மீண்டும் சமயப் பொறைப் பண்பு வளர்தல் வேண்டும்.

சமயப்பொறை என்றால் அவரவர் சமய மரபுகளை விட்டுக்கொடுக்க வேண்டுமென்பதில்லை. தன்னுடைய சமயத்தில் ஈடுபாடும் விருப்பமும் காட்டுதலும் பிற சமயங்களிடத்தில் மதிப்புக் காட்டுதலுமே வேண்டற்பாலது. இன்று பொதுவாக நோக்கின் தமக்குரிய சமய நெறிகளில் விருப்பார்வம் காட்டாமல் பேணி வளர்க்கும் பணிகளில் ஈடுபடாமல் விளம்பரத்துக்காகப் பாதுகாப்பு என்ற ஆலவட்டத்தில் சமய வெறுப்பு இயக்கச் சங்கங்களை நடத்துவது விரும்பத்தக்கதல்ல. அண்ணல் காந்தியடிகள் ஒரு இந்துவாகவே வாழ்ந்தார். “நான் ஒரு இந்து” என்று பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டார். அதேபோழ்து மற்ற மதங்களிடத்தில் அளவிறந்த மதிப்பு வைத்திருந்தார் என்பதை மறத்தல் கூடுமா? யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் பெருமான் சைவநெறிக் காப்பாளராக வாழ்ந்தார்; பணி செய்தார். அதேபோழ்து அவர் கிறிஸ்துவ மதத்து வேத நூலாகிய பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்த பெருந்தகைமையை மறத்தலும் கூடுமோ? மறத்தல் கூடாது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்து இஸ்லாம் கிறிஸ்துவ சமயங்கள் பெரிய சமயங்கள். கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களை மேற்கொண்டு ஒழுகுபவர்கள் அந்நியர்களல்லர். இந்திய மண்ணில் பிறந்தவர்கள்; இந்திய மண்ணுக்கு உரிமையுடையவர்கள்; இந்தியர்கள் என்பதை மறந்துவிடுதல் நன்றன்று. இந்த மதங்களையெல்லாம் ஆழ்ந்து கற்ற சுவாமி விவேகானந்தரின் வழிகாட்டுதலை நாம் ஏற்று அவ்வழியில் நடத்தல் நல்லது. விவேகானந்தர், “என்னுடைய அனுபவமாவது இதுதான்! இந்தச் சமத்துவ நிலைக்கு ஒரு