பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/273

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

261


கணிசமான அளவிலே எப்பொழுதேனும் எந்தச் சமயமேனும் அணுகிவந்தது என்றால் அது இஸ்லாம் ஒன்றேதான்” என்று கூறும் அனுபவவாக்கு எண்ணத்தக்கது. ஆம்! பலநூறு ஆண்டுகளாக இந்து மதம் பலகோடி மக்களைத் தீண்டத்தகாதவர்களாக வைத்திருந்தது. இந்தக் கொடுமையை எதிர்த்துப் பேசியவர்களை இந்து மதம் வெளியிலே தள்ளியது. இந்து மதத்தில் சாதிமுறைகளை தீண்டாமையை எதிர்த்துப் போராடிய மகான்கள் எண்ணற்றவர்கள் தலைமுறை தலைமுறையாகப் போராடி வந்திருக்கிறார்கள். இந்துமத பீடங்கள் நெகிழ்ந்து கொடுக்கவில்லை. சிவாஜி காலம் முதல் காஞ்சி ஜயேந்திரர் காலம் வரையில் மாற்றமில்லை. தமிழர் பார்ப்பனர் என்று இனம் பிரித்துப் பேசுகின்றனர். சராசரிப் பொதுமக்கள் நலனுக்கு மாறாகவே செய்கின்றனர்; காலத்தின் சூழ்நிலை கருதிப் பரந்த மனப்பான்மை உள்ளதுபோலக் காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. விவேகானந்தரையும் நாராயண குருவையும் அப்பரடிகள் அருட்பிரகாச வள்ளலாரையும் ஏற்றுக்கொள்ளாத இவர்கள் எப்படிச் சராசரி மனிதர்களை ஏற்றுக்கொள்வார்கள்? எதிர்பார்ப்பது தான் மதியினம்.

மேலும் இந்து இஸ்லாமிய உறவுகள் பற்றி விவேகானந்தர் கூறும் செய்திகள் நம்முடைய கவனத்திற்குரியன. “என் உறுதியான நம்பிக்கையாவது இதுவேயாம். கிரியாம்சையிலே மிளிர்கின்ற இஸ்லாம் மதத்தின் உதவியின்றி வேதாந்த வாதக் கொள்கைகள் (அவை எவ்வளவு நேர்த்தியாக எவ்வளவு ஆச்சரியமாக இருந்தபோதிலும்) மனித இனமாகின்ற பெருந்தொகையினருக்கு முற்றிலும் பிரயோஜனை மற்றவையாகும். வேதங்களோ பைபிளோ குர்-ஆனோ பெறாத மண்டலமொன்றுக்கு மனித இனத்தை அழைத்துச் செல்ல நாம் விரும்புகின்றோம். ஆனாலும் வேதங்களையும் பைபிளையும் குர்ஆனையும் சமரசப்படுத்தி