பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/276

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டாம் என்றார். பிரசாரப் போருக்குப் பயமும் குரோதமுமே காரணம். அல்லது துணை பிரசாரப் போர் மனிதகுலத்திற்கு நேரக்கூடிய அபாயங்களையே அதிகரிக்கச் செய்கிறது. பிரசாரம் பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடித் தரக் கூடியதல்ல. இது தெளிவாகப் புலனாகிறது என்பது சிந்தனையாளர் கருத்துக்கள். இன்று உடனடியாகப் பிரசாரப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மத சம்பந்தப்பட்ட சிந்தனைகள் அனுபவங்கள் அந்தந்த வழிபாட்டு நிறுவன வளாகங்களுக்குள்ளேயே பரிமாறிக்கொள்ளப் படுதல் வேண்டும். ஆன்மா நோக்கிச்செல்லும் பயணத்திற்குப் புறத்தே ஆரவாரம் ஏன்? ஆன்ம அனுபவங்கள் எல்லாச் சமயங்களிலும் உண்டு. அவைகளைக் கற்றும் கேட்டும் அறியும் முயற்சி தேவை.

சார்புகள் எந்தச் சூழ்நிலையிலும் அந்நியத் தன்மையை உருவாக்க அனுமதித்தல் ஆகாது. இறைவன் சார்பற்றவன். அளவற்ற அருளாளனாகிய இறைவன் எல்லா உலகமுமாக இருப்பவன். இறைவனுக்கு நாடு ஏது? சமயம் ஏது? சாதி ஏது? இறைவனுக்கு உலகமே பணிக்களம். வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவன் கடவுள்.

இன்றுள்ள சூழ்நிலையில் மனிதகுல ஒருமைப் பாட்டைக் காண்பதையே மதங்களின் உயர் நோக்கமாகக் கொள்ளவேண்டும். இவர் கடவுள் அவரே கடவுள் என்றும் விரும்பும் வம்புத் தன்மையுடைய இரண்டாட்டு விவாதங்களை ஒழித்திட முன்வரவேண்டும். மதங்களைச் சார்ந்த பீடங்கள் இந்த நிலைக்கு வராவிடின் உலகமாந்தர் இதயம் படைத்த மாந்தர் அறிவாளிகள் ஒன்றைச் செய்ய முன்வர வேண்டும். அந்த ஒன்றை உடனடியாகச் செய்ய முன்வர வேண்டும். அந்த ஒன்றுதான் புதிய மதம் ஒன்றை உருவாக்குவது. விஞ்ஞானத்திற்கு அடுத்துச் செய்யவேண்டிய பெரிய பணி இதுவேயாம். அந்தப் புதிய மதம் இன்றுள்ள உலக மக்களின் உயிர்த்துடிப்பான கொள்கைகளின்