பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/309

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைமையுரை

297


களில் தமிழுக்கு இடம் தருதல் தவறானதாகாது. வேண்டுமானால் பழக்கமெனும் பாசிபடிந்த உள்ளங்கள் தவறானதாக நினைக்கலாம். மேற்பரப்பில் காட்சியளிக்கும் பாசியை நீக்கிப்-பார்த்தால் அந்தப் பாசி இடையில் படர்ந்தது வேர் ஊன்றாத பாசி. இயற்கையிலேயே தண்ணீர் தெளிவுதான். அது போலவே பண்டுதொட்டே ஆலயங்களில் தமிழ் முழக்கம் கேட்கப் பெற்றதுதான். ஏன் நலிவுற்ற காலத்து நல்லுணர்வு கொளுத்திச் சைவம் பரப்பி நானிலத்தைக் காத்த நால்வர் பெருமக்கள் இன்பத் தமிழில்தானே பாடினார்கள். எனவே சமய நிலையங்கள் தமிழைப் புறக்கணித்துத் தவறானதோர் செயலை விளைவித்து விட வேண்டாமென்று குறிப்பிட ஆசைப்படுகின்றோம். விரைவில் தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் அனைத்திலும் தமிழில் அர்ச்சனை செய்கின்ற பழக்கத்தைக் கையாள முன்வர வேண்டும். இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் மனம் மாறும். அவர்கள் தமிழன்போடு சமயப்பற்றிலும் சிறந்து விளங்குவார்கள்.

4. இனி சமயத்தை வளர்ப்பதற்குரிய வழி, வீடு தோறும் செல்வதுதான். சமயச் சான்றோர்களும், சமயத் தொண்டர்களும் வீடுகள் தோறும் நுழைந்து பரிவாகப் பேசி வீட்டில் நாள் தவறாது வழிபாடு அல்லது பிரார்த்தனை குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து செய்யும்படித் தூண்ட வேண்டும். இங்ஙனம் செய்வதால் வீடுகளில் சமயம் விளக்கம்பெறும். வீடுகள் திருந்தினால் நிச்சயமாக நாடு திருந்தும் என்ற நம்பிக்கை நமக்குண்டு. இத்தொண்டினை யாரும் மேற்கொள்ளலாம். பொருட்செலவற்ற மிகச் சுலபமான தொண்டு. ஆனால் பெரும் பயன் விளைகின்ற பெரும் தொண்டு. வீடுதோறும் சமய விளக்கம் காண முயல்வோமாக!

எத்தனையோ ஆண்களாக தமிழினத்தின் ஒரு பகுதியினர் தாழ்த்தப்பட்ட மக்களாக ஒதுக்குப்புறத்தில் வாழ்

கு.XII.20.