பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/342

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





7
சிந்தனை மலர்கள்

மதங்களின் உண்மை அறி

மதம் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்கை என்பதாகும். பண்டைக் காலத்தில் மதம் என்பது ஆன்மிகத்தையும் கடவுட்சார்புடைய கொள்கைகளையும் குறிப்பதாயிற்று. வரலாற்றுப்போக்கில் மனித சமுதாயத்தை நெறிப்படுத்தும் கொள்ளைகள் பல்வேறு துறையினவாகப் பல்கிப் பெருகி வளர்ந்து வந்துள்ளன. எனவே, இன்று மதம் என்ற சொல் கடவுட்சார்புடையதாகவும் ஆன்மிகச் சார்புடையதாவும் மட்டுமே வழங்கப்பெறும் ஒரு பொருள் பொதிந்த பரந்த நிலையிலிருந்து சுருங்கிவிட்டது. இன்று மதங்கள் கடவுட்சார்புடையவனவாக மட்டுமே இருக்குமானால் ஏன் அவை தம்முள் ஒருமைப்பட்டு நிற்க முடியவில்லை? ஒருமைப்பட்டு இயங்காநிலை மட்டுமல்ல. தம்முள் முரணி நின்றும் போராடுகின்றன. உலக வரலாற்றுப் பேரேட்டில் மதச்சண்டைகளின் இரத்தக்கறை படிந்துள்ள பக்கங்களே மிகுதி. அதனால்தான் ‘சமயக்கணக்கர்’ என்று கல்லாடமும் “மதமெனும் பேய்” என்று திருவருட்பாவும் கடிந்து பேசின. மதம் என்ற சொல் சமுதாயத்தில் தனது மதிப்பை