பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/343

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்

331


இழந்தவுடன் அந்த இடத்தை நிரப்ப மதத்தலைவர்கள் கண்ட புதுச் சொல்லே ‘ஆன்மிகம்’ என்பது

ஆன்மிகம்-உயிரியல் அறிவு. ஆன்மாவின் பண்பு எனப்படும். ஆன்மிகம் என்ற சொல்லை மார்ச்சியவாதிகளும் எடுத்தாள்கின்றனர். ஆன்மிகம் என்ற பெயரிலும் கண்மூடிப் பழக்கங்களே மேவி வளர்ந்தன. இதற்குக் காரணம் மதங்களல்ல. ஆதிபத்தியத்தையும் பொருளாதாரத்தையும் நாடிய மதத்தலைவர்களேயாவர். ஆனால், மானுடன் கண்ட வாழ்வியல் முறைகளில் மதம் மிகமிக உயர்நெறியாகவே தொடக்க காலத்தில் விளங்கியது. தன்னையறிதல், தன்குற்றங்களை உணர்தல், தன்னைப் பலவீனப்படுத்தும் குற்றங்களையும். குறைகளையும் தவிர்த்தல், குறிப்பாகத் தன்முனைப்பு, தன்னலம் இவற்றினின்றும் விடுதலை பெறுதல், அன்புடையராதல், அருள்நலம் சார்ந்த சீலம் பெறுதல், ஞானம் பெறுதல், உலக உயிர்களிடத்தில் ஒருமை யுடையவராக விளக்கம் பெறுதல் முதலிய உயர்நலன்களை மக்களுக்கு அறிவுறுத்தி, வழிகாட்டி வழிநடத்தி வாழ்வித்தலே மதங்களின் குறிக்கோள். இந்த நோக்கத்துடன் மதங்கள் இயங்கி வந்ததால்தான் மானுடம் வளர்ந்தது; வாழ்ந்தது!

உடல் எப்போதும் தற்சார்புடையது. அது தனது சுகத்தையே - இன்பத்தையே அவாவி நிற்கும். ஆனால் ஆன்மா - உயிர் - பிறர் நலத்தையே கருதும். ஆன்மாவின் செல்வாக்கிற்குக் கட்டுப்பட்டு இயங்கினால் மதம் வெற்றி பெறுகிறது. இங்ஙனம் வெற்றிபெற்ற தலைவர்கள் புத்தர், மகாவீரர், முகம்மது நபி, இயேசுகிறிஸ்து, அப்பரடிகள் முதலானோர். உடலுக்குத் தேவைகள் இருப்பதைப் போல ஆன்மாவிற்கும் தேவைகள் பலப்பல உண்டு. ஆன்மாவின் தேவைகளாகிய அன்பு, ஆற்றலின் பெருக்கம், மனித நேயம், அருள், ஞானம் முதலியவற்றை நிறைவு செய்யவே மதம் தோன்றியது. உலக மாந்தரை இதயத்தால் இணையச்