பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/349

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்

337



வழிபாட்டில் ஒருமைநிலை காணத் தொடக்கக் காலத்தில் ஆரவாரமற்ற அமைதியான சூழல் தேவை. இயற்கைச் சூழல் நிறைந்த காடு, மலை, ஆற்றோரம், கடற்கரை முதலிய இடங்கள் எளிதில் மனம் ஒரு நிலைப்படுவதற்குத் துணை செய்வன, திருக்கோயில்களும் வழிபாட்டில் ஒருமைநிலை காணத் துணை செய்வன. திருக்கோயில் தோற்றத்தின் நோக்கமும் அதுவே. பலர் தனித்திருந்து ஒருமைநிலையில் இறைவனின் திருநாமத்தை எண்ணுதற்கேற்ற நிலையிலேயே பரப்பளவில் கூடுதலான திருக்கோயில்கள் தோன்றின. ஆனால், காலப்போக்கில் திருக்கோயில்களின் பல பகுதிகள் பயன்பாடில்லாது போயின. இன்று திருக்கோயிலில் இறைவன் எழுந்தருளியுள்ள. சந்நிதிகள் மட்டுமே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளன. இறைவன் சந்நிதிகளிலும் அண்மைக்காலமாக நெரிசலும் இரைச்சலுமே தோன்றி வழிபாட்டிற்குரிய சூழ்நிலையைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. பழங்காலத்தில் ஆலமர் செல்வன் சந்நிதி. கொடிக்கம்பத்திற்கு முன்னிடம் ஆகிய இடங்களில் ஒருமைநிலையோடு உட்கார்ந்து இறைவன் திருநாமத்தை எண்ணும் பழக்கம் இருந்தது. இன்று பெரும்பாலும் இந்தப் பழக்கம் அருகிப் போய்விட்டது. இது விரும்பத்தக்கதன்று. ஆதலால், திருக்கோயில் சூழலில் எங்கோ ஓரிடத்தில் அமைதியாக இருந்து இறைவனை நினைந்து நினைந்து அவன் திருவருட் பெருக்கில் திளைத்துத் தியானித்தல் வழிபாட்டின் ஒருமை நிலைக்குத் துணை செய்யும். வழிபாட்டின் ஒருமைநிலை கண்டால்தான் ஆன்மாவிற்குப் பயன் கிடைக்கும்; அனுபூதி சித்திக்கும்.

14-4-86

ஒருவர் நெருங்கச் செய்வது; ஒருமையுடையராக்குவது; அகனமர்ந்த அன்பினராக ஒழுகச் செய்வது. வன்சொல் தோன்றும் களம் தற்சார்பேயாம். தற்சாார்பான தன்னலத் திற்குக் கேடுவருமோ என்று ஐயுறும் பொழுது, தற்காத்துக்