பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/351

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்

339



சீர்திருத்தக் கருத்தும்
சமூக மேம்பாடும்

இன்று தலைவர் பெரியார் பிறந்த நாள். பகுத்தறிவையே கருவியாகக் கொண்டு, சமுதாயச் சீர்திருத்தத்திற்காக உழைத்தவர் தலைவர் பெரியார். மூடத்தனங்களின் முடைநாற்றத்தையும். சாதிப் பிரிவினைகளின் புன்மையினையும் வாழ்நாள் முழுவதும் சாடியவர் பெரியார்; தாழ்த்தப் பட்டோருக்காகப் போராடி வைக்கம்வீரராக விளங்கியவர். பெரியாரின் சமுதாயத் தொண்டு நினைக்கத்தக்கது; பின்பற்றத்தக்கது. தலைவர் பெரியார் நினைவில் நாம் சிந்தித்துச் செயற்பாடுறுதல் வேண்டும்.

மனிதகுலத்தின் வரலாறு, ஒரு நீண்ட வரலாறு. இந்த நெடிய வரலாற்றில் மனிதகுலம் வளர்ச்சி பெற்றுள்ளது. மனித குலம் மண், நீர், தீ, வளி, வெளி ஆகிய ஐம்பூதங்களை அடக்கி ஆளுவதில் வெற்றிபெற்று விட்டது. அதேபோழ்து ஒளியின் அடியில் நிழல்போல்க் கொடிய துன்பங்களையும் அனுபவித்து வந்துள்ளது; அனுபவித்துக் கொண்டிருக்கிறது ஏன்? இன்றைய மனித குலம் தனது அழிவின் எல்லைக்கு வந்துவிட்டது. அதாவது அணு ஆயுதப்போர், நட்சத்திரப் போர், ஏவுகணைகள் என்றெல்லாம் அழிவின் ஆற்றல்கள் வளர்ந்து வந்துள்ளன! ஏன் இந்த நிலை? ஆளத்தெரிந்தால் மட்டும் போதாது! தானே ஆண்டுகொள்ளவும் தெரிந்தால் தான் மனித குலத்திற்கு விடிவு தோன்றும். அதுபோலவே ஆளப்படுதலுக்கும் ஆயத்தமாக இருந்தல் நயத்தக்க நாகரிகமாகும்.

மனிதப்பிறப்பு உயர்ந்தது; மிகமிக உயர்ந்தது. பயன்காணும் பெருவாழ்வு மனித வாழ்வு. இன்ப அன்பே பயன். இந்த அறிவை முதலில் வளர்த்தாக வேண்டும். இன்று, வாழ்வாங்கு வாழும் முனைப்புடன் வாழ்கின்றவர்களையே