பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/376

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று ஆழ்வாரும் பாடுவனவற்றை உற்று நோக்குங்கள். உலகிற்கு இறைவன் ஒன்று என்று காணும் பொதுமை நினைந்து இன்புறத்தக்கது. ஆயினும், உயிரானது குறிக் கொண்டு வழிபட்டு உய்தி பெறுதற்கு, சமயநெறிசார் கற்பு மிகமிகத் தேவை. எனவே, சமரசம் என்பதற்கும் பிறர் வணங்கும் கடவுளர் மீது வெறுப்புக் கொள்ளாமை என்பதையே குறிக்கோட் பொருளாகக் கொள்ள வேண்டும்.


சைவம்


முன்னுரை

இந்த நூற்றாண்டு விஞ்ஞான நூற்றாண்டு என்று பாராட்டப்பெறுவது. மனித உலகத்தில் அறிவியல் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் பயனாக இயற்கைச் சக்திகளை அடக்கியாண்டு அனுபவிப்பதும் வெற்றி பெறுவதும் நிகழ்ந்து வருகின்றன. இவ்வழி மனிதர்களின் அனுபவ ஆற்றல் பெருகி வளர்ந்துள்ளது. அதன் காரணமாக நுகர் பொருள்களின் எண்ணிக்கையும் பெருகி வளர்ந்துள்ளன. எனினும் ஏதோ ஒருவகை அமைதியின்மை, வெறிப்புடன் கூடிய பகைமை உணர்ச்சி, போராட்டச் சூழல்கள் ஆகியவை எங்கணும் உலகத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கின்ற இரங்கத்தக்க நிலையைப் பார்க்கின்றோம்.

சமயம்

ஏன்? எதனால் மாறுபட்ட இந்த நிலை? என்று ஆராய்தல் யாவர்க்கும் இன்றைய உடனயடியான கடமை. மனிதன் புறப்பொருள்களைத் திறமையாகக் கையாளுகிறான். தன்னுடைய நுகர்வுக்கேற்றவாறு பக்குவப்படுத்திப் பயன்படுத்த முயல்கிறான். ஆயினும், தன்னை, புலன்களை, உணர்வுகளைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உணர மறக்கிறான்; மறுக்கிறான். பெரிய விபத்துக்கள்