பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/397

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் சோலை

385


“என்று நீ அன்று நான்” என்பார் தாயுமானவர். ஆன்மாக்கள் என்றும் உள்ளவையென்றால் இறைவனுக்கு ஆன்மாவுக்கும் என்ன உறவு?

கடவுளுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐம்தொழில்கள் ஏன்? இந்த ஐந்து தொழில்கள் யாரை முன்னிட்டு நிகழ்த்தப் பெறுகின்றன? கடவுள் ஆன்மாவின் வாழ்க்கைப் பயணம் தோறும் தேவைக்கேற்ப உறவு வைத்து ஆட்கொண்டருள்கின்றான். ஆன்மாக்கள் அறிவும் செயலும் முடங்கி ஆணவத்தினுடன் அறியாமையில் கட்டுண்டு கிடக்கும் பொழுது தாயிற் சிறந்த தயாவுடன் உயிர்களுக்கு நுண்ணுடலையும், அறியாமை நீக்கத்தற்குரிய வாழ்நிலையில் - வாழ்ந்திட துய்ப்பனதுய்த்து உய்யுமாறு உய்தி பெறுதலுக்குரிய உடம்பினையும் பொருத்தல் படைப்பு அறியாமை நீங்கும் காலம்வரை, பொருந்திய நுண்ணுடலை உயிர் தாங்கிப் பயன்பெறச் செய்தல் - பாதுகாத்தல், அறியாமைக்கு அரண் செய்யும் துரிசுகளை அழித்தல், உயிர் அதன் பழைய நிலையை உணராது மறைத்து வைத்தல், வாழ்க்கையில் வாழ்க்கையின் போகத்தில் ஆன்மாக்களுக்கு விருப்பத்தை உண்டாக்குதல். மறைத்தல் ஆன்மாக்களுக்கு - உயிர்களை முற்றாக அறியாமையினின்றும் மீட்டு முழுமையுறச் செய்து இன்ப அளவில் நிலைபெறச் செய்தல் அருளுதல் ஆன்மாக்களுக்குக் கடவுள் வாழ்க்கையில் ஆண்டவன் அடிமையில்லை, உடையார் - இல்லார் இல்லை. பேதமில்லை, இதுவே, உண்மையான சமயம். சித்தாந்தச் சமயம்.

பிற்காலத்தில் சமயநெறிகள் தடம்புரண்டு உடைமை, பணம் ஆகியவற்றின் தடத்தில் நடந்து சுரண்டும் சமுதாயத்திற்கு அனுசரணையாக இருந்து வேற்றுமைகளை வளர்த்து, இந்தப் புவிக்கோளை இரத்தத்தால் கழுவி, நரகத்தைப் படைத்த கொடுமைகளையும் மறந்து விடுவதற்கில்லை.