பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/406

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

394

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொடுக்காமல் வாழ்வதோடு-பிறர்தருந் துன்பத்தைப் பொறுக்கும் வெற்றியையும் நல்குகின்றது.

தமிழரின் சமயப்பண்பு தன் நிகரில்லாதது; தலையாயது. அது பாவம் செய்யாதே என்று போதிக்காமல் பாவம் செய்ய நினைக்காதே என்கிறது. அது போலவே கொலை செய்ய நினைக்காதே-திருட நினைக்காதே என்கிறது. கொலை செய்தால்-திருடினால் பாவம் என்று சொல்லாமல், அவற்றை மனத்தில் நினைத்தாலே பாவம் என்று கூறுகிறது. இதிலிருந்து தமிழருடைய சமய நெறி சமுதாயத்தில் அன்பையும் அறத்தையும் உருவாக்க உழைத் திருக்கிறதென்பது புலனாகிறது. ஆன்மீக ஈடேற்றத்துக்குத் தமிழர் சமயம் தலைசிறந்த வழிகளைக் காட்டியிருக்கிறது. வழிவகைகளைக் காட்டியதோடமையாது, அவ்வழிப்பட்டு வாழ்ந்த வளமான நிலையுைம் பெற்றிருக்கிறது. புறவாழ்வின் சிறப்புக்கு அகவாழ்வின் துணை இன்றியமையாத தென்பதை உணர்ந்து உணர்த்திய சமயம் தமிழர் சமயம். அகப்புரட்சியின் பயனாகவே புறவாழ்வைத் தூய்மையுடையதாக ஆக்க முடியுமென்று எண்ணிச் செயல்பட்ட பண்பு பாராட்டி மகிழ்தற்குரியது.

சில வீடுகளிலே வெளிச்சுவர்களுக்கு வெள்ளையடித்து உட்சுவர்களைப் புறக்கணிக்கிறார்கள். வெளிச்சுவர் பார்ப்பவர்களின் பார்வையை ஈர்க்குமேயொழிய அவ்வீட்டில் வாழ்பவர்களுக்குப் பயன்தராது. உட்சுவர் தூய்மையற்று இருந்தால் வீட்டிலுள்ளவர்களின் நல்வாழ்வு பாழ்பட்டுப் போகும். ஆகவே உட்சுவரின் துய்மையைக் கவனித்தபின்பே வெளிச்சுவரைத் துய்மையாக்க முனையவேண்டும். மனிதவாழ்விலும் கூட அகவாழ்வைப் பற்றிய சிந்தனைக்குப் பின்பே புறவாழ்வைப் பற்றிய எண்ணம் எழவேண்டும். அதுவே மனித மரபு-தமிழ்மரபு. புறப் புரட்சியின் வெற்றிக்கு அகப்புரட்சி துணைசெய்யும். மணிவாசகர் போன்ற