பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/418

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




11


திருவருள்


சமயச் சார்பற்ற தன்மை

நமது நாடு சமயச் சார்பற்ற நாடு. நமது நாட்டு வாழ்வியல் சமயச் சார்பற்றது. நமது நாட்டு இந்து மதமும் சமயச் சார்பற்ற தன்மையுடையதேயாம். சமயச் சார்பற்ற கொள்கை-கோட்பாடு. இந்தியாவின் தேசீயக் கொள்கை, கோட்பாடு! வழிவழி வளர்ந்து வந்துள்ள கொள்கைகோட்பாடு!

சமயச் சார்பற்ற தன்மை என்பது ஒரு விழுமிய கொள்கை ஏன்? எந்த ஒன்றிலும் சார்பற்ற வாழ்நிலை உயர்ந்தது! மிகமிக உயர்ந்தது! சார்பு என்பது என்ன? சார்பற்ற நிலை என்றால் என்ன? சார்பு என்பது ஒற்றினைச் சார்ந்து வாழ்வது. சார்ந்ததன் வழியில் நெகிழ்ச்சியிலாத இறுக்கமான பிடிப்புக்களுடன் வாழ்வது. அவர்தம் சிந்தனை, செயல், தனிப்பட்ட வாழ்வு சமூக வாழ்வு அனைத்தும் சார்ந்துள்ள சார்பினையே யைமாகக் கொண்டு சுழலும். அந்தச் சார்புக்கு அறிவு, உணர்வு, நீதி எல்லாம் அனுசரணையாக இருந்தால்தான் ஏற்பார். இல்லையானால் ஏற்க மாட்டார். அதுமட்டுமா? சார்ந்துள்ள சமயமே உயர்ந்தது.