பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/420

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்ற திருவாசக அடிகள் சமயச் சார்பற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டு. இந்தச் சமயச் சார்பற்ற தன்மை இந்தியா முழுதும் இமயம் முதல் குமரி வரையில் ஒரே குரலில் தலைமுறை தோறும் ஞானிகள் எடுத்துக்கூறி வந்துள்ளனர்.

இப்படி வழிவழி வந்த சமயச் சார்பற்ற தன்மை இன்று நம்முடைய நாட்டுக்கு இன்றியமையாதது. சமயக் கணக்கர் மதிவழி செல்லக்கூடாது. “மதமெனும் பேய்” என்று வள்ளலார் மறுத்தது நமக்கு ஏன்? இந்திய நாட்டின் பல்வேறு சமயங்களும் செழித்து வளர வேண்டும். இந்திய மக்கள் பழகிய நட்பியல் சார்ந்த உணர்வுடன் உறவு கலந்து வாழ்தல் வேண்டும். அப்போதுதான் இந்தியா வலிமையும் வளமும் பொருந்திய நாடாக விளங்கும்:

சமயச் சார்பற்ற தன்மை ஒரு கொள்கையல்ல; ஒரு வாழ்க்கை முறை! இந்திய வாழ்க்கைமுறை ஏற்போம்! நின்றொழுகுவோம்!


சமாதானம் வாழ்க்கையின்
ஒரு பகுதி

“சமாதானம் செய்து வைப்பவர்கள் பாக்கியவான்கள்” என்பது ஏசுவின் இனிய செய்தி. வாழ்க்கையின் பேறுகளை உண்மை, அறிவு, ஆனந்தம் என்று முறைப்படுத்துவார்கள் அருளார்கள். இன்றைய மானுடம் ஆனந்தம்-மகிழ்ச்சி, இன்பம், உடலுக்குரிய சுகம், களிப்புக்களை நிறைய பெற்று வளர்ந்துள்ளது. ஆயினும் ஆன்மாவில் அமைதி இல்லை; ஆனந்தம் இல்லை; ஏன்? நாம் முற்றிலும் ஆவேசமானதும் விரைவுணர்வு பொருந்தியதும் அற்புதமானதுமாகிய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது வாழ்க்கையில் ஏராளமான அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளைப் பற்றிய நமது கருத்து, இன்றுள்ள கருத்துடன் முற்றிலும் மாறுபட்டது. அதுமட்டுமல்ல, அன்றைய