பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/431

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வானொலியில்

419


கலங்குகிறார்கள். இன்று, சமயம் வாழ்க்கைக்காக இல்லாமல் வயிற்றுப் பிழைப்புக்காக என்று ஆகிவிட்டது. பயனுக்காக அன்றி, படாடோபத்துக்காக என்றாகிவிட்டது. இன்றைய சமய உலகில் ஈர நெஞ்சினைக் காணோம். ஆதலால் கனிந்த அன்பினையும் காணோம். அஞ்சாமை யின்மையால் சைத்தானும் கைவரிசை காட்டுகின்றான்.

ஆதலால், எங்கு நோக்கினும் துன்பம், பகை இந்த இருண்ட சூழ்நிலையிலிருந்து நம்மை வழிகாட்டிக் காப்பாற்றவல்ல ஆசிரியன் அப்பரடிகளேயாம். அப்பரடிகள் மனித உலகத்தின் துன்பம் துடைக்க வந்த மாமணி! இருள் கடிந்து எழுந்த ஞாயிறு வாழ்க்கைக்கொரு வழித் துணை ! அப்பரடிகள் உபதேசங்களால் மட்டுமல்ல, அவர்தம் வாழ்க்கையாலும் நமக்கு வழிகாட்டினார். மனம் ஒரு தன்மைத்தாயிருக்கக் கூடியதல்ல. நெஞ்சமும் கூட அப்படித்தான். இறைவனை விட்டு ஒரு நொடி பிரிந்திருந்தாலும் அது கெட்டுவிடும். புறத்தே மண்டித் திணிந்து கிடக்கும் தீமைக்கு உடனே பற்றிக்கொள்ளும் ஆற்றலுண்டு. அதனாலன்றோ “நினையாது ஒருபோதும் இருந்தறியேன்” என்று கூறுகின்றார். மாணிக்கவாசகரும் “இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!” என்று குறிப்பிடுகின்றார். நெஞ்சத்தை இறைவனை நினைந்து கொண்டிருப்பதிலேயே பழக்க வேண்டும். அஃது ஒருபொழுது மறந்தாலும் உடன் பாசி மூடிக்கொள்ளும்.

ஆதலால், அப்பரடிகளுடைய நெஞ்சு எப்பொழுதும் இடையீடில்லாமல் இறைவனுடைய திருவடிகளைத் தடவிக் கொண்டிருந்ததாம். இன்றோ நம்முடைய கைகள்தாம் இறைவனின் திருமேனிகளைத் தீண்டித் தடவுகின்றனவே தவிர, நம்முடைய நெஞ்சு அவனைத் தடவித் தீண்டுவதில்லை.

உடலுக்கு உயிர்ப்பு உயிர். உயிர்க்கு உயிர்ப்பு இறை. உடல் உயிர் உறவுக்கு, இணைப்பு மூச்சுக் காற்று. உயிர்க்கு