பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேன்”

என்று பரவையாரைக் கண்டு சுந்தரர் அதிசயிக்கின்ற செய்தியினையும்,

“முன்னேவந் தெதிர்தோன்றும் முருகனோ பெருகொளியால்
தன்னேரில் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ
மின்னேர்செஞ் சடையண்ணல் மெய்யருள்பெற் றுடையவனோ
என்னே! என் மனந்திரித்த இவன் யாரோ”

என்று சுந்தரரைக் கண்டு பரவையார் நினைந்த செய்தியினையும் திருத்தொண்டர் புராணம் சிறப்பித்துக் கூறும்.

சுந்தரர், சங்கிலியாரைக் காதலித்துத் திருமணம் செய்தது திருவொற்றியூர்த் திருக்கோயில் வளாகத்திலேயாம். ஆதலால் திருக்கோயில் திருவளாகம் அகனைந்திணை வாழ்க்கையின் பண்ணையாக விளங்கியது. திருக்கோயில் பொலிவு திருமணப் பொலிவாக விளங்கும் தன்மையது. இன்றும் இறைவன் ஆண்டுதோறும் திருமணம் செய்து கொள்கிறான். என்ன? ஆண்டுதோறும் புதுப்புதுத் திருமணமா? இல்லை, இல்லை. திருமண நாளை நினைவு கூரும் திருமணம். ஒரு நம்பியோ ஒரு நங்கையோ திருமணம் நிகழும் வரையில்தான் பிறந்த நாள் கொண்டாடலாம். திருமணம் நிகழ்ந்த பிறகு திருமண நாளே அவர்களின் நன்னாள்; அடிக்கடி நினைவு கூர்ந்து மகிழவேண்டி நன்னாள். இறைவன் உயிர்களுக்குப் போகம் - அதாவது