பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/445

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




13


சிந்தனைச் செல்வம்


சமயங்களும் மன வளர்ச்சியும்


னித மனம் சிந்திக்கும் இயல்புடையது. சிந்தனைக் குரியது. ஆனால் வெற்றுச் சூன்யத்தைப் பற்றிச் சிந்திப்பது அரிது; இயலாது. சிந்தனைக்குப் பற்றுக்கோடு தேவை. அப்பற்றுக்கோடு பருப்பொருளாகவும் அமையலாம். நுண் பொருளாகவும் அமையலாம். சில பொழுது நிகழ்வுகளாகவும் அமையலாம். இங்ஙனம் தோன்றி வளர்ந்த சிந்தனைகளின் வடிவங்களே சமயங்கள். அவை தம்முள் மாறுபடு கின்றன என்பது உண்மை. அங்ஙனம் மாறுபடுவதுதான், சமய நெறிகள் சிந்தனையின் அடிப்படையில் வளர்ந்து மாறிவருகின்றன என்பதற்கு அளவுகோல். ஆதலால், சமயம் சிந்தனைக்கு மாறுபட்டதன்று.

சமயம் பெரிதும் முகிழ்த்துத் தோன்றிய களம் சமுதாய உறவு நிலைகளேயாம். சமயம், மனித சமுதாயத்தைக் குறிப்பிட்ட நன்னெறியில் நிறுத்த அச்சத்தையும் கருவியாகக் கொண்டது. ஒரு செயலை அல்லது ஒழுக்கத்தை ஊக்குவிக்க, தண்டனை வரும் என்ற அச்சத்தையும் பரிசுகள் கிடைக்கும் என்ற உவப்பு வழி வரும் ஊக்கத்தையும் தருதல் என்ற நெறிப்படுத்தும் வகையிலேயே மோட்சம்-நரகம் என்ற