பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/455

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




15


வாழ்க்கை நலம்



அறிவியலும் அருளியலும்


றிக அறிவியலை! விஞ்ஞானத்தின் விளக்கங்கள் பெறுக! “அறிவு” என்றாலே ஒன்றை அணுகும் முறையையே குறிக்கும். அறிவியலும் அருளியலும் நம்முள் முரண் பட்டனவும் அல்ல; எதிரெதிர் செல்வனவும் அல்ல.

ஒன்றிலிருந்து பிறிதொன்று காரண காரியத் தொடர்ச்சியுடன் இயங்குத்தன்மையது. இந்த உலகம் எப்படி இயங்குகிறது! என்று சுற்றுப்புறச் சூழ்நிலையை ஆராய்ந்து அறிவது அறிவியல், நான் யார்? என் உள்ளம் யார்? ஞானங்கள் யார்? என்று அகநிலைகளை ஆராய்ந்தறிவது அருளியல்.

இன்பம் எது? துன்பம் எது? என்று ஆராய்வது அருளியல். நன்மை எது? தீமை எது? என்று ஆராய்ந்தறிவது அறிவியல், அகமும் புறமும் சேர்ந்ததே வாழ்க்கை. உடலும் ஆன்மாவும் சேர்ந்ததே வாழ்க்கை!

“ஆன்மிகம்” என்றொரு வழக்கு சமயத்திற்கு உண்டு. ஆன்மிகம். ஆன்மாவின் வாழ்க்கை என்று பொருள்படும்.