பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/457

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




16


பொங்கல் பரிசு


சமய ஒழுக்கம்


மனிதன் என்றாலே பொதுவாகத் துன்பத்தை மாற்றுகிறவன்-இன்பத்தை உண்டாக்குகிறவன் என்றுதான் நான் கருதுகிறேன். இந்த ஆற்றல் இல்லாதவன் மனிதனல்லமனித உருவில் உலவுகிற விலங்கு.

“கடவுள் மனிதனுக்கு அறிவையும், ஆற்றலையும் கொடுத்திருக்கிறார். அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தாமல் விட்டுவிடுவது கறந்த பாலைக் கற்பாறையிலே கொட்டிக் கவிழ்ப்பது போன்றது. இசச்யெல், கடவுளுக்கே பெரும் துரோகம் செய்வது போலாகும். எனவே இறைவனால் நமக்கு வழங்கப் பெற்ற அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி, முறையாக வாழ்வதில்தான் நமக்கும் பெருமை இருக்கிறது. நமக்கு ஆற்றலையும் அறிவையும் தந்த கடவுளுக்கும் பெருமை இருக்கிறது.

நமது சமயமும், இலக்கியங்களும், கலைகளும் ஆன்மாவை-உயிரை ஒத்துக்கொள்ளுகின்றன. ஆன்ம நலம் இல்லாத வாழ்க்கை முகப்பு இல்லாத வீடு போன்றது. இதனை நன்குணர்ந்தே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்