பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தந்திருக்கிறது. ஆதலால் ஆடல் வல்லானே முன்னின்று அவர்தம் புலவியைத் தீர்த்து, வாழச் செய்தருளினன். அதுபோலவே சுந்தரர் பரவையாரிடையே தோன்றிய ஊடலைத் தீர்க்க, பெருமானை,

“நாயன் நீரே நான் உமக்கிங்கு அடியே னாகில் நீர் எனக்குத்
தாயின் நல்ல தோழருமாம் தம்பிரா னாரேயாகில்
ஆயஅறிவும் இழந்து அழிவேன் அயர்வுநோக்கி அவ்வளவும்
போய் இவ்விரவே பரவையுறு புலவி தீர்த்துத் தாரும்”

என்று சுந்தரர் வேண்ட,

கழுதுகண்படுக்கும் நள்ளிரவில் பரவையார்பால் நடந்து தூது சென்ற காட்சியை எந்த எழுத்துக்களால் எழுதிக்காட்ட இயலும்! சேக்கிழாரால் மட்டுமே இயலும்!

“இறைவர் விரைவின் எழுந்தருள
எய்தும் அவர்கள் பின்தொடர
அறைகொள் திரைநீர் தொடர்சடையில் -
அரவு தொடர, அரியஇளம்
பிறைகொள் அருகு நறைஇதழிப்
பிணையல் கரும்பு தொடர,உடன்
மறைகள் தொடர, வன்தொண்டர்
மணமும் தொடர வரும்பொழுது”

என்று ஓவியமாகத் தீட்டிக் காட்டுகிறார், சேக்கிழார் பெருமான். அதிலும், முதல் தடவை பரவையார் உடன்படாமற் போகத் தோல்வியைச் சுமந்து கொண்டு ஆரூரரின் முன்வந்து நின்ற இறைவனைப் பார்க்க இரக்கமாக இருக்கிறது. சுந்தரரோ பெருமான் மனம் வைத்தால் இயலாத தில்லையென நம்புகிறார். அது மட்டுமா? இறைவன்பாற் கொண்டிருந்த கிழமை மிகுதியால் உயிர் தரியேன் என்று