பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/463

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




18


ஆன்மிகமும் அறிவியலும்


மதுரை வானொலி ஒலிபரப்பு: 18-1-93


அறிவியல் துறைகள் பலப்பல. அறிவியல் துறைகளில் ஆன்மிக அருளியல் அடங்கும். “ஆன்மிகம், சமயம் என்பவை அறிவியல் தொடர்பு இல்லாதவை, வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றி நிற்பவை; சமயம், மூடப்பழக்க வழக்கங்களை மையமாகக் கொண்டு அமைந்தது” - என்று கூறுவது தவறு. சமய நெறிகளுக்கும் அறிவியலே அடிப்படை “நான் யார்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்?” என்ற ஆராய்ச்சியிலே பிறந்து வளர்ந்து விளக்கம் பெறுவதே சமயநெறி.

கடவுள் நம்பிக்கை அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. “இந்த உலகத்தில் ஓர் ஒழுங்கும், முறைபிறழா நிகழ்ச்சியும் இருப்பது உண்மை. இதற்கு எது காரணம்? நிச்சயம் அது மனிதனை விட மேம்பட்டதாக இருத்தல் வேண்டும். அது எது, கடவுளைத் தவிர ?” என்று உரோமானிய அரசியல் ஞானி சிசரோ சொன்னதை அறிக. அது போலவே “இயற்கை கடவுளின் மறுபெயர்” என்று கிரேக்கத் தத்துவஞானி கூறுவார். இதனால் மணம், சுவை,