பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/476

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



20

மரபுகளைக் காப்பது நமது கடமை


“தினமணி” மதுரைப்பதிப்பு 18.11.94

இந்த நூற்றாண்டு, இயக்கங்கள், சங்கங்களின் நூற்றாண்டு என்று கூறலாம். இந்தப் போக்கின் விளைவு என்ன? எதிர் விளைவுகள் என்ன? என்பதை ஆராய்ந்தறிவது சமய, சமூகச் சிந்தனையாளர்கள் பொறுப்பும் கடமையுமாகும்; சங்கங்கள் - அமைப்பதும் எளிதான ஒன்று. அதனை நெறிமுறைப்படுத்துவதில் மிகுந்த இன்னல்கள் ஏற்படும். நமது சமூகம் உணர்ச்சி வசப்படும் இயல்பினது. நமது சமூகத்திற்குக் கோபமூட்டி விடுவது எளிது. ஆனால் அமைதி வழியில் அழைத்துச் செல்வது எளிதன்று. இன்றுள்ள சூழ்நிலையில் நாட்டின் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் காப்பதே தலையாய கடமை.

நமது இந்து சமயம் ஒரு சமயமாகவோ மதமாகவோ தோன்றி வளர்ந்ததல்ல. நமது இந்து சமயம் ஒரு வாழ்க்கை முறை. சொல்லப்போனால் சைவம், வைணவம் என்று பல்வேறு பெயர்கள், காலப் பரிணாமத்தில் பெற்று விளங்கிய சமய நெறிகளே ஒருங்கிணைந்து இந்தியா என்று அடிப்படையில், இந்து சமயம் என்று ஒன்றாக்கினர். இந்து சமயம் ஒரு