பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/481

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



21


மனித குலத்திற்குத் தொண்டு
செய்வோம்:


மனிதகுலம் தோன்றிப் பலநூறாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. மனித குலத்தின் சென்ற கால வரலாற்றில் சாதனைகள் பலப்பல உண்டு. அச்சாதனைகள் புவிக்கோளத்தை வளர்ந்தன; பேணிக்காத்தன; புவியை நடத்தி வந்துள்ளன. எத்தனை எத்தனையோ கொடிய போர்கள் நடந்த பின்னும் புவியில் பல்லுயிர்கள் - குறிப்பாக மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது வியப்புமட்டுமல்ல; அபூர்வமான செயல்திறன்.

மனிதர்கள் இந்த உலகைக் கூர்ந்து நோக்கவும் சிந்திக்கவும் தொடங்கிய நாளிலேயே சமயங்கள் தோன்றி விட்டன. இந்த உலக வரலாற்றில் எண்ணற்ற மதங்கள் தோன்றியிருந்திருக்கின்றன. அவற்றுள் சில மதங்கள் வழக்கத்தில் இல்லை. மிகவும் தொன்மையான கிரேக்க மதக் கலாசாரங்கள் இப்போது வழக்கில் இல்லை. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித நாகரிகமும் சமயமும் சிறந்த முறையில் இடம் பெற்றிருந்தன.

மதங்கள் மக்களை இணைத்து வைக்கும் சாதனமாக ஒரு காலத்தில் விளங்கின. மதங்கள்தான் முதன்முதலில்