பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/485

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மனித குலத்திற்கு தொண்டு செய்வோம்:

473


என்று ஏசு அறிவுறுத்தியுள்ளார். இன்றைய சூழ்நிலைக்கு ஏசு மதம் மிகவும் ஏற்புடைய ஒன்றாக விளங்குகிறது.

இன்று உலக நாடுகளில் கவனத்தை ஈர்க்கும் மதம் இஸ்லாம். 1300 ஆண்டுகளுக்கு முன் நபிகள் நாயகம் பெருமானால் காணப்பெற்றது இஸ்லாம் சமயம். அராபிய சமுதாயத்தில் ஒளி விளக்கேற்றிய பெருமை நபிகள் நாயகத்திற்கே உண்டு. “ஒரே கடவுள்” என்ற கொள்கை வழி அராபிய சமுதாயத்தை ஒன்றுபடுத்தினார். வாழ்க்கையைத் தழுவி நிற்கும் மதம். செல்வம் புறக்கணிக்கப்படக்கூடியதல்ல என்று துணிந்து சொன்ன மதம் இஸ்லாம் மதமாகும். நபிகள் நாயகம் அவர்கள் அளவற்ற அருளாளனாகிய இறைவன் உணர்த்த அருளியது திருமறை குர்ஆன்.

“மனிதர்களிடம் இரக்கமில்லாதவர்களிடம் அல்லாவுக்கு இரக்கம் கிடையாது” என்ற நபிகள் நாயகத்தின் திருமறைவாக்கு நினைந்து நினைந்து உணரத்தக்கது.

உலகச் சமயங்கள் என்று நிற்கும் ஐந்து பெரிய சமயங்களைக் கண்டோம்! சமயங்கள் அனைத்தும் ஒரே ஆதார சுருதியில் பேதமின்றிப் பேசுகின்றன. கடவுள் ஒருவரே! “ஒருவனே தேவன்” என்றார் திருமூலர். “கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்ற முகம்மது நபியின் வாக்கும் உணர்க. மனிதகுல வாழ்க்கையில் நட்பும் உதவியும் முக்கியம். சமுதாய உறவில் நட்பே முதன்மையானது. இதனை உணர்த்தவே நம்பியாரூரருக்குச் சிவபெருமான் நண்பரானார்; தோழரானார். மீண்டும் புத்தரின் அருள்வாக்கு நினைவிற்கு வருகிறது. தீமை செய்யாமை, நன்மை மிகுதியாகக் செய்தல்; அன்பும் அருளும் கொள்ளுதல். ஆகிய பெளத்தநெறிகள் ஒவ்வொரு மனிதருக்கும் ஒழுக்கக் கோட்பாடுகளாகும். இஸ்லாம் என்ற சொல்லுக்குப் பொருள் சமாதானம். சகோதரத்துவம் என்பதேயாகும். இன்றைய உலகத்திற்கு அமைதி தேவை. மக்களுடைய வாழ்க்கை மேம்பாட்டிற்காகத் தோன்றிய மதங்கள் ஏன் இன்று அதைச் செய்வதில் வெற்றியடையவில்லை. மதங்கள் நிறுவனங்களாகி விட்டதால் ‘கெட்டி’

கு.XII.31